மூவார் மாவட்டம்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மூவார் மாவட்டம்map
Remove ads

மூவார் மாவட்டம் (ஆங்கிலம்: Muar District; மலாய்: Daerah Muar; சீனம்: 麻坡县; ஜாவி: دايره موار) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்திற்கு மூவார் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள் மூவார் மாவட்டம் Muar District Daerah Muar, நாடு ...

மூவார் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 150 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 143 கி.மீ.; மலாக்கா மாநகரில் இருந்து 47 கி.மீ.; சிங்கப்பூரில் இருந்து 179 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

Remove ads

மூவார் நகரம்

மலாக்கா நீரிணையின் கரையோரத்தில்; மூவார் ஆற்றின் முகப்பில் மூவார் நகரம் அமைந்து உள்ளது. மூவார் மாவட்டம், சிங்கப்பூரைப் போல இரண்டரை மடங்கு பெரிய நிலப்பகுதியைக் கொண்டது.

மூவார் மாவட்டம் முன்பு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. மூவார் அல்லது பண்டார் மகாராணி என்பது மற்றொரு பிரிவு. லேடாங் எனும் தங்காக் என்பது மற்றொரு பிரிவு. தங்காக் ஒரு துணை மாவட்டமாக நிலை உயர்த்தப் பட்டதும், மூவார் ஒரு தனி நகராண்மைக் கழகமானது. இரண்டும் இப்போது தனித்தனியாகச் செயல் படுகின்றன.

Remove ads

வரலாறு

ஜொகூர் மாநிலத்தின் அரச நகரம் இந்த மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது. பண்டார் மகாராணி மூவார் என்று அழைக்கப் படுகிறது. ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு மாநகரத்திற்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக மூவார் விளங்கி வருகிறது.

முன்பு இந்த நகரம் தங்காக் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு, மூவார் என்பது தனி நகரமாகவும், ஒரு தனி மாவட்டமாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.[1]

மலாக்கா சுல்தானகம்

மலேசிய மாவட்டங்களில் மூவார் மாவட்டம் மிகவும் பழைமை வாய்ந்த மாவட்டமாகக்க் கருதப் படுகிறது. இந்த மாவட்டத்தில் மலாக்கா தொடர்பான பல வரலாற்று பதிவுகளும், தொல்பொருள் பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

மலாக்கா சுல்தானகம் தொடங்குவதற்கு முன்பாகவே மூவாரின் வரலாறு தொடங்கி விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1361-இல், மஜாபாகித் இந்து பேரரசின் ஒரு பகுதியாக மூவார் இருந்து உள்ளது.

மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேசுவரா. இவர் சுமத்திரா, துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டதும், மலாக்காவிற்குச் சென்ற போது, இந்த மூவார் பகுதியில் கோத்தா பூரோக் எனும் இடத்தில் சில காலம் தங்கி இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.

சுல்தான் முகமுட் சா

1511-இல், மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும், மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் மகமுட் ஷா, இந்த மூவாரில் தான் தஞ்சம் அடைந்தார். மூவாரில் இருந்தவாறு சுல்தான் மகமுட் ஷா, போர்த்துகீசியர்களை எதிர்த்துப் போராடி வந்தார். [2]

மலாக்காவை ஆட்சி செய்த ஏழாவது அரசர், சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா வின் (1477–1488) கல்லறையும் சேதம் அடைந்த நிலையில் இன்னும் மூவாரில் தான் இருக்கிறது. அந்தக் கல்லறையை போர்த்துகீசியர்கள் சிதைத்து விட்டனர். மலேசிய வரலாற்றுப் பதிவுகளில் மூவார் எனும் நகரம் பல இடங்களில் காணப்படுகிறது.

மூவார் போர்

மூவாரை போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்த போது, டச்சுக்காரர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போர்த்தலேசா டி மூவார் எனும் கோட்டையை இங்கு கட்டினார்கள். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் இங்கு ஒரு பெரிய போர் நடந்தது. அதை மூவார் போர் என்று அழைக்கிறார்கள்.[3]

1942 சனவரி 14-இல் இருந்து சனவரி 22 வரை, மூவாருக்கு அருகாமையில் இருந்த கெமிஞ்சே, மூவார் ஆறு, பக்கிரி மலை போன்ற இடங்களில் பலமான சண்டை நடைபெற்றன. மலாயா மீது ஜப்பானியர்கள் தொடுத்த தாக்குதல்களில் இதுவே ஆகக் கடைசியான போர். இந்தப் போரில், பிரித்தானியர்களுக்கு உதவியாக இருந்த 45-வது இந்தியக் காலாட்படை ஒட்டு மொத்தமாக அழிக்கப் பட்டது.

நிர்வாகப் பகுதிகள்

மூவார் மாவட்டத்தில் முக்கிம்கள்

மூவார் மாவட்டத்தில் 12 முக்கிம்கள் உள்ளன.[4]

  1. ஆயர் ஈத்தாம் (Ayer Hitam)
  2. புக்கிட் கெப்போங் (Bukit Kepong)
  3. பக்ரி சாலை (Jalan Bakri)
  4. ஜோராக் (Jorak)
  5. லெங்கா (Lenga)
  6. மூவார் (Muar Town)
  7. பாரிட் பாக்கார் (Parit Bakar)
  8. பாரிட் ஜாவா (Parit Jawa)
  9. ஸ்ரீ மெனாந்தி (Seri Menanti)
  10. சுங்கை பாலாங் (Sungai Balang)
  11. சுங்கை ராயா (Sungai Raya)
  12. சுங்கை தெராப் (Sungai Terap)

நகரங்கள்

  1. மூவார் (Muar Town)
  2. பாகோ (Pagoh)
  3. பாரிட் ஜாவா (Parit Jawa)
  4. சுங்கை பாலாங் (Sungai Balang)
  5. புக்கிட் கெப்போங் (Bukit Kepong)
  6. புக்கிட் பாசிர் (Bukit Pasir)
  7. பஞ்சூர் (Panchor)
  8. லெங்கா (Lenga)
  9. ஜாலான் பக்ரி (Jalan Bakri)
  10. புக்கிட் நானிங் (Bukit Naning)

தேர்தல் முடிவுகள்

மலேசிய மக்களவை

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

மலேசிய மக்களவையில் மூவார் மாவட்டத்தின் தொகுதிகள்.

மேலதிகத் தகவல்கள் #, தொகுதி ...

ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் மூவார் மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[5]

மேலதிகத் தகவல்கள் மாநிலம், தொகுதி ...
Remove ads

மூவார் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; ஜொகூர்; மூவார் மாவட்டத்தில் (Muar District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 346‬ மாணவர்கள் பயில்கிறார்கள். 64 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

காட்சியகம்

ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads