வோல்கோகிராத் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வோல்கோகிராத் மாகாணம் (Volgograd Oblast, உருசியம்: Волгогра́дская о́бласть, வோல்கோகிராத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் வோல்கோகிராத் நகராகும். மாகாணத்தின் மக்கள்தொகை 2,610,161 (2010 கணக்கெடுப்பு).[8]
இம்மாகாணம் இசுத்தாலின்கிராத் மாகாணம் (Stalingrad Oblast, Сталинградская область) என 1936 டிசம்பர் 5 இல் நிறுவப்பட்டது.[12] 1961 நவம்பர் 10 இல் இது தற்போதைய பெயரைப் பெற்றது.[12]
Remove ads
புவியியல்
இம்மாகாணத்தில் எல்லையின் நீளம் 2,221.9 கி.மீ. ஆகும். இதன் எல்லைகளாக சராத்தவ், ரசுத்தோவ், அஸ்திரகான், வரனியோசு மாகாணங்களும், கால்மீக்கியா குடியரசும், கசக்ஸ்தானும் உள்ளன.
முதன்மை ஆறுகள்
- வோல்கா
- டான் ஆறு
- மெத்வெடிட்சா ஆறு
- கோபையார்
(200 ஆறுகளுக்கு மேலாக உள்ளன)
மக்கள் வகைப்பாடு
2010 கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை 2,610,161 ஆகும். (7,500 பேரை விட அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள இனங்கள் மட்டும் காட்டப்பட்டுள்ளன.)
Remove ads
சமயம்
2012 அதிகாரபூர்வத் தரவுகளின்படி,,[13] 54.5% உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 4% பொதுக் கிறித்தவர்கள், 2% ஏனைய கிறித்தவர்கள், 3% முஸ்லிம்கள்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads