குவாலியர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவாலியர் (Gwalior) (இந்தி/மராத்தி: ग्वालियर ⓘ) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவிற்கு தெற்கே 122 கிலோமீட்டர்கள் (76 mi) தொலைவிலும் மாநிலத் தலைநகர் போபாலிலிருந்து 423 கிலோமீட்டர்கள் (263 mi) வடக்கேயும் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரமும் இங்குள்ள கோட்டையும் பல வட இந்திய பேரரசுகளின் மையமாக விளங்கியுள்ளன. குவாலியர் நகரம் இதே பெயரிலுள்ள மாவட்டம் மற்றும் கோட்டத்திற்கு நிர்வாகத் தலைமையகமாக விளங்குகிறது.
குவாலியர் கோட்டை பலமுறை கைமாறியுள்ளது; எட்டாவது நூற்றாண்டில் டோமராக்களிடமிருந்து முகலாயர்களுக்கும் பின்னர் சிந்தியாக்களின் கீழ் மராத்தாக்களுக்கும் (1754) கைமாறி குறைந்த காலம் ஜான்சியின் லட்சுமி பாயிடமும் தாத்தியா டோப்பிடமும் பிரித்தானியர்களிடமும் இருந்தது.
இங்கு பல சிறப்புமிகு கல்விக்கூடங்கள் உள்ளன; இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகம் (IIITM), இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைக் கழகம், சிந்தியா பள்ளி, மாதவ் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கழகம், இலட்சுமிபாய் தேசிய உடலியல் கல்வி நிறுவனம் ஆகியன இவற்றில் சிலவாகும்.
Remove ads
குறிப்பிடத்தக்க நபர்கள்
- கார்த்திக் ஆர்யன்,
- விவேக் அக்னிகோத்திரி,
- இயாவேத் அக்தர்,
- இயான் நிசார் அக்தர்,
- நிதா பாசுலி,
- அனுராக் காசியப்பு,
- அம்சத்து அலி கான்
- சல்மான் கான்,
- பியுசு மிசுரா
- அர்சவர்தன் ராணே,
- தௌலத்ராவ் சிந்தியா
- சோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா
- மாதவ்ராவ் சிந்தியா
- விசய ராச்சே சிந்தியா
- மம்தா சர்மா,
- மாதாச்சி சிந்தியா
- சிவேந்திர சிங்,
- குசால் டாண்டன்,
- தான்சேன்,
- நரேந்திர சிங் தோமர்,
- அடல் பிகாரி வாச்பாய்,
- கணேசு சங்கர் வித்யார்த்தி.
Remove ads
படக்காட்சியகம்
- குவாலியர் கோட்டையில் உள்ள மான் கோயில் அரண்மனை
- இடப்புறமிருந்து:குவாலியர் கோட்டை, ஜெய்விலாஸ் அரன்மனை, உயர்நீதிமன்றம் மற்றும் சூரியக் கோயில்
- சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

