தீர்த்தங்கரர்களின் வாகனங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தீர்த்தங்கரர்கள் சமண சமயப் பெரியார்கள் ஆவார்கள். அவர்கள் இருபத்துநான்கு பேர்கள் என்பது மரபு. அவர்களின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அவர்களை எளிதில் அடையாளம் காண அவர்களின் வாகனங்கள் நமக்குப் பெரிதும் உதவுகின்றன. இவர்களின் உருவங்கள் பக்கவாட்டில் இரண்டுகைகளும் தொங்கவிட்டு நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் காணப்படுகின்றன. பெரும்பாலும் ஆடையற்றநிலையில் அதாவது திகம்பர நிலையில்தான் இவர்களின் சிற்பங்கள் உள்ளன. இவ்வுருவங்களில் பெருத்த வேறுபாடு இல்லை; இச்சிற்பங்களின் அடியில் உள்ள வாகனங்களைக்கொண்டுதான் இப்பெரியார்களை நாம் உணரமுடியும். தீர்த்தங்கரர்களின் இருமருங்கிலும் உள்ள சிலைகள் யட்சர், யட்சிகளின் சிலைகளாகும்.அந்தத்தீர்த்தங்கரர்களின் பெயர்களையும், அவர்களின் சின்னங்கள் அல்லது வாகனங்களின் பெயர்களையும் கீழே காணலாம்.[1]

தீர்த்தங்கரர்கள் வாகனங்கள்
ரிசபநாதர் அல்லது ஆதிநாதர்காளை
அஜிதநாதர்யானை
சம்பவநாதர்குதிரை
அபிநந்தநாதர்குரங்கு
சுமதிநாதர்கோட்டான்
புஷ்பதந்தர்முதலை
சிரேயன்சுவநாதர்காண்டாமிருகம்
அரநாதர்மீன்
வசுபூஜ்ஜியர்எருமை
சாந்திநாதர்மான்
விமலநாதர்பன்றி
அனந்தநாதர்முள்ளம் பன்றி
குந்துநாதர்ஆடு
தருமநாதர்வஜ்ஜிராயுதம்
முனீஸ்வரநாதர்ஆமை
பார்சுவநாதர்பாம்பு
மகாவீரர்சிங்கம்
Remove ads

தீர்த்தங்கரர்களின் சின்னங்கள்

தீர்த்தங்கரர்கள் சின்னங்கள்
பத்மபிரபாதாமரை
சுபர்சுவநாதர்சுவசுத்திக்கா
சந்திரபிரபாவளர்பிறை சந்திரன்
சீதளநாதர்கற்பக மரம்
மல்லிநாதர்கலசம்
நமிநாதர்நீலத் தாமரை
நேமிநாதர்சங்கு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads