தேசிய நெடுஞ்சாலை 81 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 81, (National Highway 81 (India)) பொதுவாக தே. நெ. 81 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தென்னிந்தியாவில் உள்ள கோயம்புத்தூர் நகரத்தைக் கடலூர் மாவட்டம் சிதம்பரத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த நெடுஞ்சாலை முன்னர் தேசிய நெடுஞ்சாலைகள் 67 மற்றும் 227-ன் (பழைய எண்கள்) ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் [2] மார்ச் 2010 அன்று அரசு அறிவிப்பின் மூலம் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண்களை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை 81ஆக மாற்றப்பட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலை 321.4 km (199.7 mi) நீளமானது. இந்த தேசிய நெடுஞ்சாலை முழுக்க முழுக்க இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் காங்கேயம்,கரூர் வழியாக செல்கிறது.[3]
Remove ads
வழித்தடம்
சந்திப்புகள்
தே.நெ. 544 கோயம்புத்தூர் அருகில் முனையம்[1]
தே.நெ. 381 அவிநாசிபாளையம் அருகில்
தே.நெ. 381A வெள்ளக்கோயில் அருகில்
தே.நெ. 44 கரூர் அருகில்
தே.நெ. 67 குளித்தலை அருகில்
தே.நெ. 38 திருச்சிராப்பள்ளி அருகில்
தே.நெ. 136 கீழப்பழூர் அருகில்
தே.நெ. 36 கங்கைகொண்டசோழபுரம் அருகில்
தே.நெ. 32 சிதம்பரம் அருகில் முனையம்[1]
விரிவாக்கம்
பின்வரும் கட்டங்களாக தே.நெ 81 விரிவாக்கம் செய்யப்படுகின்றது.
- முதல் 50கி.மீ நீளம் மட்டும் நான்கு வழிச்சாலையாகவும், மீதமுள்ள நீளம் இருவழிச்சாலையாகவும் மேம்படுத்தப்படுகின்றது.[4]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads