1826
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1826 (MDCCCXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.[1][2][3]

Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 8 – அர்ச்செண்டினாவின் முதலாவது அரசுத்தலைவராக பெர்னார்டீனோ ரிவடாவியா பதவியேற்றார்.
- பெப்ரவரி 11 - லண்டன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- பெப்ரவரி 24 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
- ஏப்ரல் 1 – உள் எரி பொறிக்கான காப்புரிமத்தை சாமுவேல் மோறி பெற்றார்.
- ஏப்ரல் 10 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர்.
- சூன் - யோசெப் நிசிபோர் நியெப்சு முதலாவது புகைப்படத்தைத் தயாரித்தார்.
- ஆகத்து 18 - நாடுகாண் பயணி அலெக்சாண்டர் கோர்டன் லைங் டிம்பக்ட்டுவை அடைந்த முதலாவது ஐரோப்பியரானார்.
தேதிகள் அறியப்படாதவை
- முதலாவது தொடருந்து சுரங்கப் பாதை இங்கிலாந்தில் லிவர்பூல், மான்செஸ்டர் நகரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டது.
- நீரிணைக் குடியேற்றப் பிரதேசம் என்ற பிரித்தானியக் குடியேற்றம் நிறுவப்பட்டது.
- பிரித்தானிய இந்தியா அசாமை இணைத்துக் கொண்டது.
- யாழ்ப்பாணத்தில் உடுவில் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.முத்திவழி என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.
Remove ads
பிறப்புகள்
- வேதநாயகம் பிள்ளை, தமிழ் எழுத்தாளர் (இ. 1889)
இறப்புகள்
- சூலை 4 - தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்க குடியரசுத் தலைவர் (பி. 1743)
- சூலை 4 - ஜான் ஆடம்ஸ், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (பி. 1735)
1826 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads