1830
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1830 (MDCCCXXX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய, 12 நாட்கள் பின்தங்கிய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 13 - லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.
- பெப்ரவரி 3 – ஒட்டோமான் படைகளிடம் இருந்து கிரேக்கம் விடுதலை பெற்றது.
- மே 13 – பெரும் கொலம்பியாவில் இருந்து எக்குவடோர் பிரிந்தது.
- சூன் 12 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
- சூன் 26 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக நான்காம் வில்லியம் முடி சூடினான்.
- சூலை 5 - அல்ஜீரியா மீது பிரான்ஸ் படையெடுத்தது.
- சூலை 17 – பார்த்தலேமி திமோனியே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை பிரான்சில் பெற்றார்.
- சூலை 20 – யூதர்களுக்கு கிரேக்கம் குடியுரிமையை வழங்கியது.
- சூலை 27 – பிரான்சில் சூலை புரட்சி ஆரம்பம்.
- சூலை 29 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.
- ஆகத்து 9 – பிரான்சின் அரசனாக பூயி பிலிப் முடி சூடினான்.
- ஆகத்து 25 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.
- ஆகத்து 31 – புல் வெட்டும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை எட்வின் படிங் பெற்றார்.
- செப்டம்பர் 15 - இங்கிலாந்தில் மான்செஸ்டரிலிருந்து லிவர்பூர் வரை ஜார்ஜ் ஸ்டீபென்சன் முதன் முதல் ரயில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
- செப்டம்பர் 27 – பெல்ஜியப் புரட்சி முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் 4 - பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.
- நவம்பர் 29 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
Remove ads
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
பிறப்புகள்
- சிவசம்புப் புலவர், ஈழத்துப் புலவர்
இறப்புகள்
- டிசம்பர் 17 - சிமோன் பொலிவார், புரட்சியாளர் (பி. 1783)
- மே 16 - ஜோசப் ஃவூரியே பிரெஞ்சுக் கணிதவியலர் (பி. 1768)
1830 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads