கேடிஎம் இடிஎஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலாயா மின்சார தொடருந்து சேவை அல்லது கேடிஎம் இடிஎஸ் அல்லது இடிஎஸ், (மலாய்: Perkhidmatan Tren Elektrik KTM ஆங்கிலம்: KTM Electric Train Service); என்பது மலேசியத் தீபகற்பத்தில் நகரங்களுக்கு இடையிலான மின்சாரத் தொடருந்து சேவைகளை வழங்கும் மலேசியப் போக்குவரத்து அமைப்பு ஆகும். மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) எனும் நிறுவனத்தினால் இந்தச் சேவை நடத்தப்படுகிறது.[2]
இந்த நிறுவனம் பன்முக மின்சாரத் தொடருந்துகளை (Electric Multiple-Unit) (EMU) பயன்படுத்துகிறது. மலாயா தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்படும் இரண்டாவது மின்சார தொடருந்து சேவையாகும். இதற்கு முன்னர் மலாயா பயணிகள் தொடருந்து (KTM Komuter) சேவை; மற்றும் மலாயா பன்னகர தொடருந்து (KTM Intercity) சேவை; ஆகிய இரு சேவைகள் பயன்பாட்டில் இருந்தன.
Remove ads
பொது
மலாயா மின்சார தொடருந்து சேவை, மலேசியாவின் வேகமான தொடருந்து சேவையாகும். தீபகற்ப மலேசியாவில் கிம்மாஸ் மற்றும் பாடாங் பெசார் இடையே மின்மயமாக்கப்பட்ட மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தின் இரட்டைப் பாதையில் இது செயல்படுகிறது. இதற்கு முன்பு மலாயா பன்னகர தொடருந்து சேவை வழங்கியது.
இந்தச் சேவை தற்போது மலாயா பன்னகர தொடருந்து பிரிவால் இயக்கப் படுகிறது. இது முன்னர் இடிஎஸ் நிறுவனத்தால் (ETS Sendirian Berhad) இயக்கப்பட்டது. அப்போது மலாயா தொடருந்து நிறுவனம், அதன் முழு உரிமையாளராக இருந்தது.
Remove ads
தொடருந்து சேவைகள்

Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads