நான்காம் கிருட்டிணராச உடையார்

மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia

நான்காம் கிருட்டிணராச உடையார்
Remove ads

நான்காம் கிருட்டிணராச உடையார் (4 சூன் 1884 – 3 ஆகத்து 1940, பெங்களூர் அரண்மனை) மைசூரின் மன்னராக 1894 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறினார். தான் இறக்கும் வரை (அதாவது 1940 ஆம் ஆண்டு வரை) இவர் ஆட்சியில் இருந்தார். இவர் ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் இறக்கும் போது உலகப் பணக்கார நபர்களுள் ஒருவராக திகழ்ந்தார். அப்போது இவருடைய சொத்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.[1] இவர் மைசூரை ஆண்ட உடையார் வம்சத்தின் இருபத்து நான்காம் மன்னர் ஆவார். இவர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.

விரைவான உண்மைகள் நான்காம் கிருட்டிணராச உடையார், ஆட்சி ...
மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads