வெங்கையா நாயுடு

மேனாள் துணைக் குடியரசுத் தலைவர் From Wikipedia, the free encyclopedia

வெங்கையா நாயுடு
Remove ads

வெங்கையா நாயுடு (தெலுங்கு: వెంకయ్య నాయుడు) (பிறப்பு: 1 ஜூலை 1949) இந்தியக் குடியரசின் 14வது துணைத் தலைவராக[1] [2] தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 11, ஆகத்து 2017-ம் நாள் பதவி ஏற்றார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகராக இருந்தவர். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்தார். மேலும் ஜனா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆந்திராவின் உதயகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார். இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூசண் விருது 2024 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் அறிவிக்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் எம். வெங்கையா நாயுடு, 13th இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads