உருசியா அதன் தென்மேற்கில் உள்ள உக்ரைனின் மீது பெரிய அளவிலான படையெடுப்பை 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கியது. இது 2014 இல் தொடங்கிய உருசிய-உக்ரைனியப் போரின் மிகப்பெரிய விரிவாக்கம் ஆகும். உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின், 1997-இற்குப் பின்னரான நேட்டோ விரிவாக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தது என்றும், உக்ரைன் நேட்டோ கூட்டணியில் சேர்வதை சட்டப்பூர்வமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரினார்.[32] படையெடுப்பிற்கு முன்னதாக, 2021 இன் முற்பகுதி முதல் உருசிய இராணுவக் கட்டமைவு நெருக்கடி நீடித்து வந்தது. படையெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு, உருசியா கிழக்கு உக்ரைனின் எல்லைகளுக்குள் தனியெத்சுக் மக்கள் குடியரசு, இலுகன்சுக் மக்கள் குடியரசு ஆகிய இரண்டு சுயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலங்களை அங்கீகரித்தது. 2022 பிப்ரவரி 21 அன்று, உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள தொன்பாசு பகுதிக்குள் நுழைந்தன. பிப்ரவரி 22 அன்று, உருசியாவின் கூட்டமைப்புப் பேரவை நாட்டிற்கு வெளியே இராணுவப் படைகளைப் பயன்படுத்த பூட்டினுக்கு ஒருமனதாக அங்கீகாரம் அளித்தது.

விரைவான உண்மைகள் நாள், இடம் ...
2022 உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பு

31 ஆகத்து 2024 இல் இராணுவ நிலைகள்:
       உக்ரைனின் கட்டுப்பாட்டில்
       உருசிய, உருசிய-சார்புப் படைகளின் கட்டுப்பாட்டில்
நாள் 24 பெப்ரவரி 2022 (2022-02-24) – இன்று வரை
(2 ஆண்டு-கள், 6 மாதம்-கள் and 1 வாரம்)
இடம் உக்ரைன்
முடிவு தொடர் நிகழ்வு
பிரிவினர்
ஆதரவு:
தளபதிகள், தலைவர்கள்
பலம்
  •  உக்ரைன்:
  • 209,000 (இராணுவம்)
  • 102,000 (துணை இராணுவம்)
  • 900,000 (முன்பதிவுப் படை)[9]
இழப்புகள்
  • உருசியா
  • உருசியாவின் அறிக்கை:
  • 2 பயணிகள் கப்பல்கள் மீது குண்டுவீச்சு (பலர் உயிரிழப்பு)[10]
  • 1 சுகோய்-25 வீழ்ந்து நொறுங்கியது[11]
  • 1 அன்டனோவ் ஏஎன்-26 வீழ்ந்து நொறுங்கியது (அனைவரும் உயிரிழந்தனர்)[12]
  • உக்ரைனின் அறிக்கை:
  • 2,800 உயிரிழப்புகள்[13]
  • 4+ பிடிபட்டனர்[14][15]
  • ~80 தாங்கிகள் அழிப்பு[16]
  • 516 கவச வாகனங்கள் அழிப்பு[17]
  • 10 வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன[16]
  • 7 உலங்கு வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன[16]
  • ஐக்கிய இராச்சியத்தின் அறிக்கை:
  • 450 படையினர் உயிரிழப்பு[18]
  • உக்ரைன்
  • உக்ரைனின் அறிக்கை:
  • 40+ படையினர் உயிரிழப்பு[19]
  • 1 சரக்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது (ஐவர் உயிரிழப்பு)[20]
  • 1 சுகோய்-27 சுட்டு வீழ்த்தப்பட்டது[21]
  • உருசியாவின் அறிக்கை:
  • உக்ரைனின் இராணுவ விமானத்தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழக்கப்பட்டன[22]
  • 150+ படையினர் சரண்[11][23]
  • 6 போர் வானூர்திகள் வீழ்த்தப்பட்டன[24]
  • 1 போர் உலங்கூர்தி வீழ்த்தப்பட்டது[24]
  • 5 ஆளில்லா வானூர்திகள் வீழ்த்தப்பட்டன[24]
  • 67 தாங்கிகள் அழிப்பு[24]
  • 87 இராணுவ வாகனங்கள் அழிப்பு[24]
  • ஐக்கிய இராச்சியத்தின் அறிக்கை:
  • 137 படைகள் உயிரிழப்பு[18]
  • ஐக்கிய இராச்சியத்தின் அறிக்கை: 57 உக்ரைனியப் பொதுமக்கள் உயிரிழப்பு[18]
  • உக்ரைனின் அறிக்கை: 137 உக்ரைனியர்கள் உயிரிழப்பு, 316 காயம்[25]
  • ஐக்கிய இராச்சியத்தின் அறிக்கை: 194 உக்ரைனியர்கள் உயிரிழப்பு[18]
  • ஐநா அறிக்கை: 100,000 பேர் இடம்பெயர்வு[26]
  • 1 துருக்கிய படகு சேதம்[27]
  • 1 மல்தோவா படகு சேதம்[28][29]
  • 1 பனாமா சரக்குக் கப்பல் சேதம்[30]
  • 1 யப்பானியப் படகு சேதம்[31]
மூடு
போருக்கு எதிரான மற்றும் ஆதரவான ருசியர்களின் குரல்-காணொலி
25 பிப்ரவரி 2022 அன்று கீவ் நகரத்தின் போர்க்கள நிலவரம்-காணொலி

பிப்ரவரி 24 அன்று கி.ஐ.நே 05:00 (ஒ.ச.நே+2) மணியளவில், பூட்டின் கிழக்கு உக்ரைனில் "சிறப்பு இராணுவ நடவடிக்கையை" அறிவித்தார்; சில நிமிடங்களுக்குப் பிறகு, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட உக்ரைன் முழுவதும் உள்ள இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடங்கின. உக்ரைனிய எல்லைக் காவல் படை உருசியா, பெலருஸ் உடனான அதன் எல்லைப் பகுதிகள் தாக்கப்பட்டதாகக் கூறியது.[33][34] இரண்டு மணி நேரம் கழித்து, உருசியத் தரைப்படை உக்ரைனுக்குள் நுழைந்தது.[35] இத்தாக்குதலுக்குப் பதிலளிக்கும் முகமாக, உக்ரைனியத் தலைவர் வலோதிமிர் செலேன்சுக்கி இராணுவச் சட்டத்தை அறிவித்தார். உருசியாவுடனான தூதரகத் தொடர்புகளைத் துண்டித்து, பொதுமக்கள் அணிதிரட்டலை அறிவித்தார். இந்தப் படையெடுப்பு பரவலான பன்னாட்டுக் கண்டனத்தைப் பெற்றது, உருசியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.[36][37]

போரின் உடனடி விளைவுகள்

  • உக்ரைனில் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
  • உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது
  • உருசியா நாட்டின் பணத்தின் மதிப்பு 8% அளவில் வீழ்ச்சி கண்டது.
  • மாஸ்கோ பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டது.
  • உக்ரைன் நாட்டின் தலைநகரம் கீவ் மற்றும் வணிக நகரம் கார்கீவ் மற்றும் சுமி போன்ற நகரங்களில் உருசியப் படைகள் தரையிறங்கி தாக்குதல்கள் தொடுத்தது.
  • உருசியாவுடனான அரசியல்ரீதியான உறவுகளை உக்ரைன் துண்டித்துக் கொண்டது.
  • ஐரோப்பிய, கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் தங்கள் வான்வெளியில் ருசிய விமானங்கள் பறக்கத் தடை விதித்தது.
  • அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உருசியா மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் நிதி பரிமாற்றத் தடைகள் விதித்தது.[38][39]
  • உருசியா உடனான நேரடி மற்றும் மறைமுக வங்கி நிதிப்பரிவர்த்தனைகளை உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியவைகள் நிறுத்திக் கொண்டது.
  • வங்கி நிதிபரிவர்த்த்தனைகளுக்கு உதவும் விசாகார்டு, மாஸ்டர்கார்டு போன்ற நிறுவனங்கள் அதன் பயன்பாட்டை உருசியாவில் தடைசெய்தது.

கங்கா நடவடிக்கை

உக்ரைன் நாட்டில் படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் 23,000 இந்தியர்களை போலாந்து, உருமேனியா, அங்கேரி, சிலோவாக்கியா, மல்தோவா நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டனர். கங்கா நடவடிக்கை மூலம் 26 பிப்ரவரி 2022 முதல் 11 மார்ச் 2022 முடிய, அந்நாடுகளிலிருந்து இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.[40][41]

உருசியா ஆக்கிரமிப்பின் நூறு நாட்கள் முடிவில்

2024 அன்றுடன் உக்ரைன் மீதான உருசியாவின் ஆக்கிரமிப்பு போரின் 816வது நாள் முடிவில், உக்ரைன் நாட்டின் 18% நிலப்பரப்புகள் உருசியா இராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.[42]

அகதிகளாக வெளியேறுதல்

உருசியாவின் 100-வது நாள் ஆக்கிரமிப்பு போரின் முடிவில், 2 சூன் 2022 அன்று 1 கோடியே 20 லட்சம் உக்ரேனியர்கள் நாட்டிற்குள்ளேயே புலம் பெயர்ந்துள்ளனர். மேலும் 68 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் போலந்து, உருமேனியா, அங்கேரி, மல்தோவா மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாகச் சென்றுள்ளனர்.[43][44] போலாந்து நாட்டில் மட்டும் 36 இலட்சம் உக்ரைனிய அகதிகள் குடியேறியதால், அந்நாட்டின் மக்கள் தொகை 10% அதிகரித்துள்ளது.உருசியா மீது உலக நாடுகள் 5,831 தடைகளை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னணி

Thumb
உக்ரைனில் 2014-ஆம் ஆண்டில் உருசியாப் சார்பு கிளர்ச்சிப்படைகள் மற்றும் அமைதியின்மையின் வரைபடம். அமைதியின்மையின் தீவிரம், அதன் உச்சத்தில், வண்ணமயமாக்கல் மூலம் குறிக்கப்படுகிறது. 'RSA' என்பது உக்ரைனின் 'பிராந்திய மாநில நிர்வாகத்தை குறிக்கிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயன்றது. உக்ரைன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர்வதால் உருசியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக அமையும் எனக்கருதிய உருசியா, உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர தடுத்தது. 2014-ஆம் ஆண்டில் உக்ரைனில் உருசிய மொழி பேசுபவர்களைக் கொண்டு உக்ரைனில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளை உருசியா தூண்டியது. இதனால் உக்ரைனின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேசத்தில் உருசிய மொழி அதிகமாக பேசும் குடியரசுகளான தனியெத்சுக் மக்கள் குடியரசு மற்றும் இலுகன்சுக் மக்கள் குடியரசுகள் 2014 செப்டம்பர் 5 அன்று தங்களை தனி நாடுகளாக அறிவித்துக் கொண்டன. இந்த நாடுகளுக்கு உருசியா 2022 செப்டம்பர் 21 அன்று அங்கீகாரம் வழங்கியது மேலும் உக்ரைனின் கிரிமியா மூவலந்த தீவுப் பகுதியை ருசியா ஆக்கிரமிப்பு செய்து கொண்டது. 2021-2022-ஆம் ஆண்டுகளில் உருசிய-உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகலைத் தொடர்ந்து இப்போர் துவங்கியது.

போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைகள்

  • 28 பிப்ரவரி 2022 அன்றுடன் ஐந்தாவது நாளாக போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், போரை நிறுத்துவதற்கு உருசியா மற்றும் உக்ரைன் நாட்டுப் பிரதிநிதிகள் பெலரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமெல் நகரத்தில் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கியுள்ளனர்.[45][46] இந்த பேச்சு வார்த்தையில் முடிவுகள் எட்டப்படாமல் முடிவுற்றது.
  • இராண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் பெலரஸ்-போலந்து நாடுகளின் எல்லைப்புற கிராமங்களான குசுனித்சா அல்லது [47][48] நகரத்தில் நடத்தப்படவுள்ளது.
  • மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தை 7 மார்ச் 2022 (திங்கள் கிழமை) அன்று நடத்தப்படும் என உக்ரைன் தெரிவித்துள்ளது.[49]

போர் நிகழ்வுகள்

  • ஆறாம் நாள் போர் மிகக்கடுமையாக இருந்தது. கார்கீவ் நகரத்தில் ருசியப் ப்டைகள் உலகின் இரண்டாவது பெரிய தொலைக்காட்சி கோபுரம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அருகில் குண்டு மழை பொழிந்து கடும் சேதம் விளைவித்து. கீவ் நகரத்திலும் உருசியா இராணுவம் அரசுக் கட்டிடங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
    • கார்கீவ் நகரத்தில் மருத்துவப்படிப்பு படிக்கும் இந்திய மாணவர் நவீன் எஸ். கவுடா, உருசியா இராணுவத்த்தின் துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டார்.[50]
  • உக்ரைனின் தெற்கில் கருங்கடல் துறைமுக நகரமான கெர்சன் நகரத்தை 3 மார்ச் 2022 அன்று உருசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்றது.[51]
  • போர் காரணமாக 10 இலட்சம் உக்ரேனிய மக்கள் போலந்து, அங்கேரி, சிலோவாக்கியா, மால்டோவா போன்ற அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரி கூறியுள்ளார்.[52]
  • 3 மார்ச் 2022 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பை நிறுத்தக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும், எதிராக 5 நாடுகளும் வாக்களித்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.[53]
  • 4 மார்ச் 2022 அன்று உக்ரைனின் தென்கிழக்கில் பாயும் தினேப்பர் ஆற்றின் கரையில் அமைந்த சப்போரியா நகரம் அருகே உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரும் சப்போரிசுக்கா அணுமின் நிலையத்தை உருசியப் படைகள் குண்டு வீச்சு மூலம் கைப்பற்றியது.[54][55]
  • 6 மார்ச் 2002 அன்று உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் நகரம் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் மட்டும், மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான மீட்பு பணிகளுக்காக போர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என ருசியா அறிவித்தது.[56]
  • 21 மே 2022 அன்று உருசியப் படைகள் மரியுபோல் நகரத்தைக் கைப்பற்றினர். உக்ரைன் படைகள் சரண் அடைந்தது.[57][58]

உக்ரைனின் 4 பிராந்தியங்களை உருசியாவுடன் இணைத்தல்

உருசிய இராணுவம் கைப்பற்றிய உக்ரைனின் கிழக்கில் உள்ள கெர்சன் மாகாணம், தோனெத்ஸ்க் மாகாணம், லுகான்ஸ்கா மாகாணம் மற்றும் சப்போரியா மாகாணங்களை உருசியாவுடன் இணைத்துக் கொண்டதாக உருசிய அதிபர் புதின் 30 செப்டம்பர் 2022 அன்று அறிவித்தார். மேலும் இந்த 4 பகுதிகளில் இதற்கு முன்பாக இணைப்பு குறித்து பொது வாக்கெடுப்பை உருசியா நடத்தியிருந்தது. இந்த இணைப்பை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இச்செயல் சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.[59][60] உக்ரைனின் 4 பிராந்தியங்களை உருசியா இணைத்ததை ஒப்புதல் வழங்க ஐக்கிய நாடுகள் அவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ருசியாவின் கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.[61]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. தனியெத்சுக் மக்கள் குடியரசும், இலுகன்சுக் மக்கள் குடியரசும் பிரிவினை-கோரிய நாடுகளாகும், இவை 2014 மே மாதத்தில் தங்கள் விடுதலையை அறிவித்தன, தெற்கு ஒசேத்தியாவின் நடைமுறை மாநிலம் மற்றும் உருசியா (2022 முதல்).[2][3][4]
  2. உருசியப் படைகள் பெலருசியப் பிரதேசத்தில் இருந்து படையெடுப்பின் ஒரு பகுதியை நடத்த அனுமதிக்கப்பட்டது.[1] பெலாருசியத் தலைவர் அலெக்சாண்டர் லுகசெங்கோ, தேவைப்பட்டால் பெலருசியப் படைகள் படையெடுப்பில் பங்கேற்கலாம் என்றும் கூறினார்.[5]
  3. திரான்சுனிஸ்திரியாவின் நிலை சர்ச்சைக்குரியது. அது தன்னை ஒரு விடுதலை அடைந்த நாடாகக் கருதுகிறது, ஆனால் இதை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. மல்தோவா அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இதனை மல்தோவாவின் பிரதேசத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றன.
  4. உக்ரைனைக் குறிவைக்கும் ஏவுகணைகள் திரான்சுனிஸ்திரியாவில் இருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.