From Wikipedia, the free encyclopedia
2023 ஆசியக் கிண்ணம் (2023 Asia Cup) அல்லது சூப்பர் 11 ஆசியக் கோப்பை (Super 11 Asia Cup)[1] என்பது ஆசியக் கிண்ணத்தின் 16-ஆவது பதிப்பாகும். இந்தப் போட்டிகள் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளாக விளையாடப்பட்டன. இந்தத் தொடரை பாக்கித்தான் அதிகாரபூர்வமாக நடத்தியது.[2] 6 நாட்டு அணிகள் மோதிய இத்தொடர்,[3] 2023 ஆகத்து 30 முதல் செப்டம்பர் 17 வரை பாக்கித்தானிலும், இலங்கையிலும் நடைபெற்றன.[4] நடப்பு வாகையாளராக இலங்கை விளையாடியது.[5] ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் முதல் ஆசியக் கோப்பை இதுவாகும். இதில் நான்கு போட்டிகள் பாக்கித்தானிலும், மீதமுள்ள ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடைபெற்றன.[6][7][8]
நாட்கள் | 30 ஆகத்து – 17 செப்டம்பர் 2023 |
---|---|
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்-சுழல், வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | பாகித்தான், இலங்கை |
வாகையாளர் | இந்தியா (8-ஆம் தடவை) |
இரண்டாமவர் | இலங்கை |
மொத்த பங்கேற்பாளர்கள் | 6 |
மொத்த போட்டிகள் | 13 |
தொடர் நாயகன் | குல்தீப் யாதவ் |
அதிக ஓட்டங்கள் | சுப்மன் கில் (302) |
அதிக வீழ்த்தல்கள் | மதீச பத்திரன (11) |
ஆசியத் துடுப்பாட்ட அவையின் ஐந்து முழு உறுப்பினர்களான ஆப்கானித்தான், வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான், இலங்கை அணிகள் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. 2023 ஆசியத் துடுப்பாட்ட அவை ஆண்கள் பிரீமியர் கோப்பையை வென்றதன் மூலம் தகுதி பெற்ற நேபாளமும் இவர்களுடன் இணைந்தது. இந்திய அரசாங்கத்தின் மறுப்பு காரணமாக பாக்கித்தானுக்குப் பயணம் செய்ய மறுத்த இந்தியாவைத் தவிர, அனைத்து அணிகளும் பாக்கித்தானில் குறைந்தபட்சம் ஒரு சில ஆட்டங்களில் விளையாடின.[9][10][11] 2023 சனவரியில், ஆசியத் துடுப்பாட்ட அவை 2023 மற்றும் 2024க்கான போட்டிகளுக்கான் திகதிகளையும் வடிவமைப்பையும் அறிவித்தது.[12][13][14] முதலில், போட்டி 2021 இல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் 19 பெருந்தொற்றுக் காரணமாக 2023 க்கு ஒத்திவைக்கப்பட்டது. போட்டிக்கான அட்டவணை 2023 சூலை 19 அன்று அறிவிக்கப்பட்டது.[15] இறுதிப் போட்டியில் இலங்கையை 10 இலக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது எட்டாவது ஆசியக் கோப்பையை வென்றது.
போட்டியின் குழுக்கள் மற்றும் வடிவம் 9 ஜனவரி 2023 அன்று அறிவிக்கப்பட்டது. ஆறு அணிகள் மூன்று வீதம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன.[16] ஆறு முதல் சுற்றுப் போட்டிகள், ஆறு சூப்பர் 4 போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப் போட்டி என மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.[17] இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் குழு அ வில் இடம் பெற்றன. அதே சமயம் நடப்பு வாகையாளரான இலங்கை வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் குழு ஆ வில் இடம்பெற்றது [18] ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 4 க்கு முன்னேறின. அங்கிருந்து முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.[19]
பாகித்தான் | |||
---|---|---|---|
லாகூர் | முல்தான் | கொழும்பு | கண்டி |
கடாபி அரங்கம் | முல்தான் துடுப்பாட்ட அரங்கம் | ஆர். பிரேமதாச அரங்கம் | முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் |
கொள்ளளவு: 27,000[20] | கொள்ளளவு: 30,000[21] | கொள்ளளவு: 35,000 | கொள்ளளவு: 35,000 |
போட்டிகள்: 3 | போட்டிகள்: 1 | போட்டிகள்: 6 | போட்டிகள்: 3 |
ஆசியத் துடுப்பாட்ட அவையின் முழு உறுப்புரிமை கொண்ட அணிகள் இச்சுற்றில் விளையாட நேரடியாகத் தகுதி பெற்றன. நேபாள அணி 2023 ஏசிசி ஆண்கள் பிரீமியர் கோப்பை இறுதிப் போட்டியில் அமீரக அணியை வென்றதை அடுத்து இச்சுற்றில் முதல் தடவையாக விளையாடத் தகுதி பெற்றது.[22]
தகுதிக்கான வழிமுறைகள் | நாள் | நடத்தும் நாடு | அணிகள் | தகுதி |
---|---|---|---|---|
ஐசிசி முழு உறுப்பினர் | பொருத்தமில்லை | எவையுமில்லை | 5 | |
2023 ஏசிசி ஆண்கள் பிரீமியர் கோப்பை | 18 ஏப்ரல் — 2 மே 2023 | நேபாளம் | 1 |
நிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | பாக்கித்தான் (H) | 2 | 1 | 0 | 0 | 1 | 3 | 4.760 |
2 | இந்தியா | 2 | 1 | 0 | 0 | 1 | 3 | 1.028 |
3 | நேபாளம் | 2 | 0 | 2 | 0 | 0 | 0 | −3.572 |
சூப்பர் 4 இற்குத் தெரிவு
எ |
||
பாபர் அசாம் 151 (131) சோம்பால் காமி 2/85 (10 நிறைவுகள்) |
சோம்பால் காமி 28 (46) சதாப் கான் 4/27 (6.4 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
ஆசிப் சேக் 58 (97) ரவீந்திர ஜடேஜா 3/40 (10 நிறைவுகள்) |
ரோகித் சர்மா 74* (59) |
நிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | இலங்கை (H) | 2 | 2 | 0 | 0 | 0 | 4 | 0.594 |
2 | வங்காளதேசம் | 2 | 1 | 1 | 0 | 0 | 2 | 0.373 |
3 | ஆப்கானித்தான் | 2 | 0 | 2 | 0 | 0 | 0 | −0.910 |
சூப்பர் 4 இற்குத் தெரிவு
எ |
||
எ |
||
எ |
||
பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் 11 செப்டம்பர் 2023 அன்று இந்தியா-பாக்கித்தான் இடையேயான சூப்பர் நான்கு மோதலுக்கு ஒதுக்கப்பட்ட நாளாக அறிவித்தது.[32] ஒதுக்கப்பட்ட நாள் தூண்டப்பட்டால், போட்டி இடைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செப்டம்பர் 11 அன்று தொடரும்.[33]
செப்டம்பர் 12 அன்று இலங்கையை 41 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்தியா பத்தாவது முறையாக ஆசியக்கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.[34] இரண்டு நாட்களுக்குப் பிறகு, மழையால் தாமதிக்கப்பட்ட போட்டியில் பாக்கித்தானை இரண்டு இலக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை, 11-ஆவது தடவையாக இறுதிப் போட்டியை அடைந்தது.[35]
நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|
1 | இந்தியா | 3 | 2 | 1 | 0 | 4 | 1.759 |
2 | இலங்கை | 3 | 2 | 1 | 0 | 4 | −0.134 |
3 | வங்காளதேசம் | 3 | 1 | 2 | 0 | 2 | −0.469 |
4 | பாக்கித்தான் | 3 | 1 | 2 | 0 | 2 | −1.283 |
இறுதிப் போட்டிக்குத் தெரிவு.
எ |
||
முஷ்பிகுர் ரகீம் 64 (87) அரிசு ரவூஃப் 4/19 (6 நிறைவுகள்) |
இமாம்-உல்-ஹக் 78 (84) சொரிபுல் இசுலாம் 1/24 (8 நிறைவுகள்) |
எ |
||
சதீர சமரவிக்ரம 93 (72) அசன் மகுமுத் 3/57 (9 நிறைவுகள்) |
தவ்கீது இரிதோய் 82 (97) தசுன் சானக்க 3/28 (9 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
எ |
||
எ |
||
எ |
||
சுப்மன் கில் 27 (19) |
போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த முதல் ஐந்து பேர் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[50]
வீரர் | ஓட்டங்கள் | ஆட்டப்பகுதிகள் | NO | சராசரி | ஓ.வி | கூ.ஓ | 100 | 50 | 4s | 6s |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுப்மன் கில் | 302 | 6 | 2 | 75.50 | 93.49 | 121 | 1 | 2 | 35 | 6 |
குசல் மெண்டிசு | 270 | 6 | 0 | 45.00 | 85.71 | 92 | 0 | 3 | 27 | 5 |
சதீர சமரவிக்ரம | 215 | 6 | 0 | 35.83 | 89.21 | 93 | 0 | 2 | 19 | 2 |
பாபர் அசாம் | 207 | 4 | 0 | 51.75 | 97.64 | 151 | 1 | 0 | 20 | 4 |
முகம்மது ரிஸ்வான் | 195 | 4 | 2 | 97.50 | 94.20 | 86* | 0 | 2 | 19 | 3 |
போட்டியில் ஏழு இலக்குகளை வீழ்த்தியவர்கள் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[51]
வீரர் | இலக்குகள் | ஆட்டப்பகுதிகள் | ஓட்டங்கள் | நிறைவுகள் | BBI | Econ. | சராசரி | 5இ |
---|---|---|---|---|---|---|---|---|
மதீச பத்திரன | 11 | 6 | 270 | 40.5 | 4/32 | 6.61 | 24.54 | 0 |
முகமது சிராஜ் | 10 | 4 | 122 | 26.2 | 6/21 | 4.63 | 12.20 | 1 |
துனித் வெல்லாளகே | 6 | 179 | 2.0 | 5/40 | 4.26 | 17.90 | 1 | |
சகீன் அஃப்ரிடி | 5 | 235 | 41.00 | 4/35 | 5.73 | 23.50 | 0 | |
குல்தீப் யாதவ் | 9 | 4 | 103 | 28.3 | 5/25 | 3.61 | 11.44 | 1 |
ஆரிசு ரவூஃப் | 4 | 120 | 25.00 | 4/19 | 4.80 | 13.33 | 0 | |
தஸ்கின் அகமது | 4 | 172 | 33.3 | 4/44 | 5.13 | 19.11 | 0 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.