அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 151-ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். இத்தொகுதி அரவக்குறிச்சி வட்டம் மற்றும் கரூர் வட்டத்தின் கிராம ஊராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி என 2 பேரூராட்சிகள் கொண்டது. 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.13 இலட்சம் ஆகும்.[2] சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த 247 வாக்குச் சாவடிகள் உள்ளது.[3]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் மேற்கே ஒட்டன்சத்திரம் மற்றும் காங்கேயம் ஆகிய தொகுதிகளும், கிழக்கே கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளும், வடக்கே மொடக்குறிச்சி மற்றும் கபிலர் மலை ஆகிய தொகுதிகளும், தெற்கே ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர் ஆகிய தொகுதிகளும் அமைந்துள்ளன.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- அரவக்குறிச்சி தாலுகா
- கரூர் தாலுகா (பகுதி)
வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் நஞ்சை புகழூர் கிராமங்கள்,
டி.என்.பி.எல். புகழூர் (பேரூராட்சி) புஞ்சை புகழூர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி (பேரூராட்சி)[4].
வாக்காளர் எண்ணிக்கை
செப்டம்பர் 2011 நிலவரப்படி 162365 வாக்காளர்களை [5] கொண்ட தொகுதி இது.
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
தமிழ்நாடு
1967
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
