இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள்
Remove ads

முதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி) ஒவ்வொன்றின் தலைவராக இருக்கிறார். இந்திய அரசியலமைப்பின் படி, மாநில அளவில் ஆளுநர் சட்டப்படி தலைவராக இருப்பினும், நடைமுறைப்படி செயலாக்க அதிகாரம் முதலமைச்சரிடம் இருக்கிறது. பொதுவாக மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியை (அல்லது கூட்டணியை) அரசாங்கம் அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். சட்டமன்றத்தில் நம்பிக்கையைப் பெற்ற ஒரு முதலமைச்சரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். பிறகு அவர் எத்தனை முறை அப்பதவியை வகிக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.

Thumb
இந்தியாவில் தற்போது ஆளும் கட்சிகள்

அக்டோபர் 2019 முதல் ஜம்மு-காஷ்மீரில் முதலமைச்சர் பதவி காலியாக உள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது. மற்ற 30 மாநிலங்களில் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி ஒருவரே பதவியில் உள்ள பெண் முதல்வர் ஆவார்.2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஆட்சியில் உள்ள ஒடிசாவின் நவீன் பட்நாயக் நீண்ட காலம் பதவியில் உள்ள முதல்வர் ஆவார். மிசோரமின் ஜோரம்தங்கா மூத்த முதல்வரும் அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு இளைய முதல்வரும் ஆவர். 12 மாநிலங்களில் பாஜகவும் 5 மாநிலங்களில் காங்கிரசு கட்சியும் 2 மாநிலங்களில் ஆம் அத்மியும் ஆட்சியில் உள்ளன. மற்ற கட்சிகள் எதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்தில் ஆட்சியில் இல்லை.

29 இந்திய மாநிலங்களுக்கும் இரண்டு ஆட்சிப்பகுதிகளுக்கும் முப்பதொன்று முதலமைச்சர்கள் உள்ளனர்[1]. அவர்களது பட்டியல் வருமாறு:

Remove ads

மாநிலங்களின் முதலமைச்சர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், மாநிலம் ...
  • ஆட்சிப்பகுதிகள்
Remove ads

கட்சிவாரியாக

2022ல் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்திய மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளின் நடப்பு பட்டியல்:

மேலதிகத் தகவல்கள் கட்சி, மாநிலங்கள்/ஆட்சிப்பகுதிகள் வென்ற எண்ணிக்கை ...

தற்போது, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 15 மாநிலங்களிலும் 1 ஆட்சிப்பகுதியிலும் (புதுச்சேரி) ஆட்சி புரிகின்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 4 மாநிலங்கலும்; ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப்பகுதிலும் (தில்லி) பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி புரிகின்றது. மீதமுள்ள 9 மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் ஆட்சி புரிகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads