எசுப்பானிய அமெரிக்கா

From Wikipedia, the free encyclopedia

எசுப்பானிய அமெரிக்கா
Remove ads

எசுப்பானிய அமெரிக்கா (Spanish America) அல்லது இசுப்பானிக் அமெரிக்கா (Hispanic America) (எசுப்பானியம்: Hispanoamérica, América española அல்லது América hispana) அமெரிக்காக்களில் உள்ள எசுப்பானியம் பேசுகின்ற நாடுகள் அடங்கிய பகுதியாகும்.[1][2]

Thumb
எசுப்பானிய அமெரிக்காவிலுள்ள நாடுகளைக் காட்டும் நிலப்படம்.
Thumb
அமெரிக்காக்களில் எசுப்பானியம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள்.
   50%
   30%
   20%
   10%
   5%
   2%
Thumb
16வது,17வது, 18வது நூற்றாண்டுகளில் அமெரிக்காக்களில் இருந்த ஐரோப்பிய குடியேற்றங்களும் ஆட்பகுதிகளும்

இந்த நாடுகளுக்கும் எசுப்பானியாவிற்கும் அல்லது அதன் முன்னாள் ஐரோப்பிய பெருநகரத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த அனைத்து நாடுகளிலிலுமே எசுப்பானியம் முதன்மை மொழியாக உள்ளது; சிலவற்றில் ஒன்று அல்லது மேற்பட்ட முதற்குடிகளின் மொழிகளுடன் (குவாரனி, கெச்வா, ஐமர, மாயன் போன்றவை), அல்லது ஆங்கிலத்துடன் (புவர்ட்டோ ரிகோவில்) எசுப்பானியம் அலுவல்மொழியாக இணைத்தகுதி பெற்று விளங்குகின்றது.[3] கத்தோலிக்க கிறித்தவமே பெரும்பான்மையினரின் சமயமாக விளங்குகின்றது.[4]

ஐபீரோ-அமெரிக்கா என்ற வகைப்பாட்டில் எசுப்பானிய அமெரிக்க நாடுகளுடன் பிரேசிலும் (முந்தைய "போர்த்துக்கேய அமெரிக்கா") சேர்க்கப்படுகின்றது; சிலநேரங்களில் ஐபீரிய மூவலந்தீவு நாடுகளான போர்த்துகல், எசுப்பானியா, அந்தோராவும் சேர்க்கப்படுகின்றன. எசுப்பானிய அமெரிக்காவும் இலத்தீன் அமெரிக்காவும் வேறானவை; இலத்தீன் அமெரிக்காவில் எசுப்பானிய அமெரிக்கா தவிர பிரேசில், மற்றும் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடு அல்லது கனடா தவிர்த்த முன்னாள் பிரான்சியக் குடியேற்றங்களும் சேர்க்கப்படுகின்றன.[5]

Remove ads

வரலாறு

அமெரிக்காக்களில் எசுப்பானிய ஆதிக்கம் 1492இல் தொடங்கியது; 15ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை, கண்டங்கள் கண்டறிபட்டதில் தொடங்கி பல்வேறு ஐரோப்பிய அரசுகள் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியாவில் பெரும்பகுதிகளையும் அரசுகளையும் கைப்பற்றிட்ட உலக வரலாற்றின் ஒரு அங்கமாகும். எசுப்பானிய அமெரிக்கா பரந்த எசுப்பானியப் பேரரசின் முதன்மை அங்கமாக இருந்தது.

1808இல் எசுப்பானியாவை நெப்போலியன் கையகப்படுத்திய பின்னரான குழப்பத்தில் எசுப்பானியப் பேரரசு பிளவுற்றபோது எசுப்பானிய அமெரிக்க ஆட்பகுதிகள் தங்கள் விடுதலைப் போர்களைத் துவக்கின. 1830ஆம் ஆண்டுவாக்கில், மீதமிருந்த பகுதிகள் பிலிப்பீன்சு தீவுக்கூட்டம், கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ தீவுகள் மட்டுமே; இவையும் 1898இல் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது.

Remove ads

நாடுகள்

மேலதிகத் தகவல்கள் நாடு, மக்கள்தொகை ...
Remove ads

மீப்பெரும் நகரங்கள்

மேலதிகத் தகவல்கள் நகரம், நாடு ...

குறிப்புகள்

  1. ச.கிமீயில்.
  2. Values listed in billions USD.

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads