ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நடாத்தப்பட்டு வருகிறது.

துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டையாளருக்கான சாதனைகள் பலவற்றை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். பந்துவீச்சு சாதனைகளில் கிளென் மெக்ரா முன்னணி வகிக்கிறார்.

Remove ads

குறியீடுகள்

அணிக் குறியீடு

  • (300–3) என்பதன் கருத்து, ஒரு அணி மூன்று இலக்குகள் இழப்புக்கு 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அத்துடன், வெற்றிகரமான துரத்தல் காரணமாகவோ அல்லது பந்துவீசுவதற்கு வாய்ப்பு இல்லாமை காரணமாகவோ இன்னிங்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.
  • (300) என்பதன் கருத்து, ஒரு அணி 300 ஓட்டங்களையும் பெற்று சகல இலக்குகளையும் இழந்துள்ளது என்பதாகும்.

துடுப்பாட்டக் குறியீடு

  • (100) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்துள்ளார் என்பதாகும்.
  • (100*) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதுள்ளார் என்பதாகும்.

பந்துவீச்சுக் குறியீடு

  • (5–100) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார் என்பதாகும்.

தற்போது விளையாடுவோர்

  • ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தற்போதும் விளையாடிக்கொண்டிருக்கும் சாதனை வீரர்களின் பெயருக்குப் பின்னால் ^ குறியீடு காணப்படும்.
Remove ads

அணி நிலை சாதனைகள்

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலாவது ...

வெற்றி விழுக்காடு முடிவிலா ஆட்டங்களை விலக்கியும் சமன்களுக்கு அரைவெற்றி என எடுத்தும் கணக்கிட்டப்பட்டுள்ளது.

ஒரு போட்டித்தொடர்

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலாவது ...

விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளது; 2007 ஆஸ்திரேலியா 11 போட்டிகள், 2003 ஆஸ்திரேலியா 11 போட்டிகள், 1996 இலங்கை 8 போட்டிகள் (புறக்கணிப்புப் போட்டிகள் 2 உட்பட). 1975 உலகக்கிண்ணத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றது (5 போட்டிகள்).[9]

தொடர் சாதனைகள்

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலாவது ...

+ ஆஸ்திரேலியா 34 போட்டிகளில் 32ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் சமநிலை, ஒரு ஆட்டம் முடிவில்லை.

Remove ads

துடுப்பாட்ட சாதனைகள்

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்

Thumb
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
Thumb
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலாவது ...

சச்சின் தெண்டுல்கர் பல்வேறு துடுப்பாட்ட சாதனைகளைக் கொண்டுள்ளார். அவற்றுள் அதிக சதங்கள், அதிக அரைச் சதங்கள் மற்றும் அதிக ஓட்டங்கள் என்பன அடங்கும். மேலும் அவர் அதிக ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்.[24]

ஒரு போட்டித்தொடர்

Thumb
இந்திய அணியின் சௌரவ் கங்குலி உலகக்கிண்ணத் தொடரொன்றில் மூன்று சதங்களைப் பெற்றுள்ளார்.
மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...

சச்சின் தெண்டுல்கர் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக அரைச்சதங்களைப் பெற்றுள்ளார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இருமுறை 80களிலும் 90களிலும் ஆட்டமிழந்துள்ளார்.[25]

தொடர் சாதனைகள்

Thumb
தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித் உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து நான்குமுறை அரைச்சதம் பெற்றுள்ளார்.
மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலாவது ...

பொண்டிங், 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கெதிராகச் சதம் பெற்றார். பின் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டியில் ஸ்கொட்லாந்துக்கெதிராகச் சதம் பெற்றார்.[17]

Remove ads

பந்துவீச்சுச் சாதனைகள்

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்

Thumb
ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளரான கிளென் மெக்ராத் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...

பந்து வீச்சுச் சாதனைகளில் கிளென் மெக்ராத் முன்னிலை வகிக்கிறார். இச் சாதனைகளில் மூன்றை அவர் வசப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு இலக்குகளைப் பெற்ற ஒரே பந்து வீச்சாளராக லசித் மாலிங்க திகழ்கிறார். இவர் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின்போது தென்னாபிரிக்க அணிக்கெதிராக இச்சாதனையை நிகழ்த்தினார்.[38] சமிந்த வாஸ், 2003ல் வங்காள தேச அணிக்கெதிரான போட்டியில் ஐந்து பந்துகளில் நான்கு இலக்குகளை வீழ்த்தியுள்ளார். போட்டியின் முதல் மூன்று பந்துகளில் இவர் மூன்று இலக்குகளையும் பெற்றது ஒரு சாதனையாகும். சேத்தன் சர்மா, சக்லைன் முஷ்டாக், பிரெட் லீ மற்றும் கேமர் ரோச் ஆகியோரும் ஹற்றிக் சாதனை புரிந்துள்ளனர்.[39][40]

உலகக்கிண்ணப் போட்டியொன்றில் ஹற்றிக் பெற்ற முதல் வீரர் சேத்தன் சர்மா ஆவார். உலகக்கிண்ணப் போட்டிகளில் இரண்டு ஹற்றிக் பெற்ற முதல் வீரர் லசித் மாலிங்க ஆவார்.

ஒரு போட்டித் தொடர்

மேலதிகத் தகவல்கள் இலக்குகள், பந்துவீச்சாளர் ...
Remove ads

களத்தடுப்புச் சாதனைகள்

சிறந்த களத்தடுப்பாளர்களுக்கான சாதனைகள் பல்வேறு காலப்பகுதிகளில் விளையாடிய வெவ்வேறு களத்தடுப்பாளர்களால் உருவாக்கப்பட்டாலும் இலக்குக் காப்பாளருக்கான சாதனைகளில் முன்னிலை வகிப்பவர் ஆஸ்திரேலிய அணி வீரர் அடம் கில்கிறிஸ்ட் ஆவார். இவர் அனைத்துப் போட்டிகள், ஒரு தொடர் மற்றும் ஒரு போட்டி ஆகியவற்றில் அதிக ஆட்டமிழப்புக்களைச் செய்துள்ளார்.

அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்

Thumb
ஆஸ்திரேலிய அணியின் அடம் கில்கிறிஸ்ட் உலகக்கிண்ண வரலாற்றில் சிறந்த இலக்குக் காப்பாளராவார்.
மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...

ஒரு போட்டித் தொடர்

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...

ஒரு போட்டி

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...
Remove ads

ஏனையவை

உதிரிகள்

உதிரி என்பது துடுப்பாட்ட வீரர் ஒருவரால் தனது துடுப்பின் மூலம் பெறப்படும் ஓட்டங்கள் தவிர்ந்த ஓட்டங்களாகும். முறையற்ற பந்துவீச்சு (நோபோல்) ஒன்றின் போது துடுப்பாட்ட வீரர் தனது துடுப்பினால் பந்தை அடிப்பதன் மூலம் பெறப்படும் ஓட்டங்கள் இவற்றுள் அடங்காது. உதிரிகள் துடுப்பாட்ட வீரரின் ஒட்டங்களுடன் சேர்க்கப்படாது தனியே கணக்கிடப்படும்.

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...

மைதானங்கள்

உலகக்கிண்ணம் இங்கிலாந்தில் நான்குமுறை நடைபெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து மைதானங்களில் அதிக போட்டிகள் நடைபெற்றுள்ளன.

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...

நடுவர்கள்

ஸ்டீவ் பக்னர் 1992 முதல் 2007 வரையான ஐந்து இறுதிப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். இதுவோர் உலகக்கிண்ண சாதனையாகும்.[49] ஆயினும் இவர் டேவிட் ஷெப்பேர்டிலும் 2 போட்டிகள் குறைவாக கடமயாற்றியுள்ளார்.[50]

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...

அதிக பங்குபற்றல்

அதிக போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர்களே காணப்படுகின்றனர் ஏனெனில் அவர்கள் நான்கு தொடர்ச்சியான உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர். ஐந்து தொடர்களில் பங்குபற்றிய வீரர்களே முதல் பத்து இடங்களில் காணப்படுகின்றனர்.[9]

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...

அண்டர்சன் கும்மின்ஸ், கெப்லர் வெசல்ஸ், எட் ஜோய்ஸ் மற்றும் இயோன் மோர்கன் ஆகிய நால்வரும் உலகக்கிண்ணப் போட்டிகளில் இரு வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டோராவர்.

வயது

20 வயதிலும் குறைந்த, 32 வீரர்கள் உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவர்களுள் 21 பேர் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தோராவர்.[51] இன்று வரை, 40இலும் கூடிய வயதுடைய 14 வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.[52]

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...

தலைமைத்துவம்

மேலதிகத் தகவல்கள் சாதனை, முதலிடம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads