கோதண்ட இராமையா

திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோதண்ட இராமையா (கே.ஆர் மற்றும் கேயார் என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் ஓர் இந்திய தமிழ் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு திரையுலக அமைப்புகளில் பல முன்னணி பதவிகளில் இருந்துள்ளார்.[2][3]

விரைவான உண்மைகள் கேயார், பிறப்பு ...
Remove ads

தொழில்

கே.ஆர் 1972 இல் சென்னையில் உள்ள அடையார் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட செயலாக்கம் பிரிவில் படித்தார். 1975 இல் பட்டம் பெற்றதும், தூர்தர்ஷன் கேந்திரத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார். கே.ஆர் தனது முதல் திரைப்படமாக மலையாளத் திரைப்படமான சிசிரதில் ஓரு வசந்தம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். வெளியீட்டிற்கு முன்னர், இந்த படம் பல விநியோக சிக்கல்களை எதிர்கொண்டது, இறுதியில் 1980 இல் சுகுணா ஸ்கிரீனால் வெளியிடப்பட்டது. படம் வணிக ரீதியாக தோல்வியுற்ற போதிலும், சென்னை நகரம், வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாடு முழுவதும் திரைப்பட விநியோகம், வெளியீட்டுக்குச் செல்ல இது இவருக்கு ஊக்கத்தை அளித்தது. இந்த அனுபவத்தைக் கொண்டு இவர் தில்லு முல்லு, தாய் வீடு, வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி, புன்னகை மன்னன், சின்னபூவே மெல்லபேசு, மைக்கேல் மதன காமராஜன், பூவிழி வாசலிலே, குரு சிஷ்யன், மாப்பிள்ளை, ராஜாதி ராஜா, மைடியர் குட்டிச்சாத்தான் 3 டி போன்ற வெற்றிப் படங்களை விநியோகித்தார்:.[4]

1991 முதல், கே.ஆர் தொடர்ச்சியாக நடுத்தர செலவில் தயாரிக்கபட் படங்களை இயக்கி தயாரித்துள்ளார். தமிழில் ஈரமான ரோஜாவே திரைப்படத்தை புதுமுகங்களைக் கொண்டு இவர் இயக்க அது மிகப்பெரிய அளவில் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. நடிகர்கள் விஜயகாந்த், ராம்கி, குஷ்பூ, ஊர்வசி ஆகியோரைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் இவர் குறிப்பிடத்தக்க படங்களை உருவாக்கினார். இவர் மொத்தத்தம் பதினான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் வெளியான இவரது டான்சர் திரைப்படத்தின் கதாநாயகன் மிகவும் குறிப்பிடத்தக்கவராவார். அப்படத்தில் நடித்த குட்டி ஒரு திறமையான நடனக் கலைஞர், திறமையான கலைஞரான அவர் தேசிய விருது, மூன்று மாநில விருதுகள், கனேடிய மதிப்புமிக்க திரைப்பட விழாவில் ஒரு விருதையும் வென்றார்.[சான்று தேவை] இந்த படம் லண்டன் ஊனமுற்றோர் கலை மன்றத்தில் ஒரு சிறப்புத் திரையிடலில் திரையிடப்பட்டது.[சான்று தேவை]

திரைப்படத் தயாரிப்பில் இவரது ஈடுபாட்டால் பல்வேறு இந்திய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது, இருபத்தி எட்டு திரையரங்குகளை தமிழ்நாட்டு நகரங்கள், பாண்டிச்சேரி, திருப்பதி போன்ற பகுதிகளில் குத்தகைக்கு எடுத்திருந்தார். 1984 முதல் 1993 வரை சென்னையில் சத்யம் சினிமாஸ் திரையரங்கையும் நடத்தினார்.

இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை தமிழ், தெலுங்கிலும், கமலகாசன் நடித்த உரையாடல் இல்லாத படமான சேசும்படம் , தமிழில் முதல் 70 மிமீ திரைப்படமான ரஜினிகாந்த் நடித்த மாவீரன், விலங்குகளை முக்கிய பாத்தரமாக, அவை பேசக்கூடியதான குறிப்பிடத்தக்க படமனா எங்களையும் வாழ விடுங்கள் ; முதல் முறையாக அனாக்ளிஃப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்பை கிட்ஸ் 3டி; [5] நான்கு மொழிகளில் 3 டி யில் வெளியான முதல் படமான ஜெய் வேதாளம். போன்றவை தமிழ்த் திரைப்படத் துறையில் இவர் பதித்த சில சுவடுகள் ஆகும்:

2013 ஆம் ஆண்டில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர், படத்தின் பெயர்களை பதிவு செய்தல், நொடித்துபோன திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி அளித்தல், தாமதத்துக்கு உள்ளான படங்களை வெளியிட உதவுவது உள்ளிட்ட பிரச்சினைகளில் பணியாற்றியுள்ளார்.[6] பிற முயற்சிகளாக, படத்தின் விளம்பரச் செலவை ஒழுங்குபடுத்துதல், குறைத்தல் மற்றும் நடிகர்கள் தங்கள் படங்களின் அனைத்து விளம்பர செயல்பாடுகளிலும் கலந்துகொள்ள வேண்டும் போன்றவை ஆகும்.

கே.ஆர் 2003 இல் தமிழில் இதுதான் சினிமா என்ற புத்தகத்தையும் எழுதினார். அதில் திரைப்படத் துறையின் நுணுக்கங்களை விவரித்தும், அதன் எதிர்காலத்தை இன்றய காலகட்டத்தின் பார்வையில் பார்த்து எழுதினார். 1980 களின் முற்பகுதியில் இருந்து இவர் திரைப்படத் துறை மீது அதிகாரம் செலுத்துபவராகவும், தொழில்துறை நுண்ணறிவுகளையும், அடுத்த காலகட்டத்தில் முன்னோக்கி செல்லும் வழியையும் தருகிறார்.[சான்று தேவை]

கே.ஆர் ராடான் மீடியாவொர்க்சில் துணைத் தலைவராக பணியாற்றினார்.

Remove ads

உறுப்பினர் மற்றும் கௌரவ பதவிகள்

மேலதிகத் தகவல்கள் பதவி, அமைப்பு ...

இந்திய ஒன்றிய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு. முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நாடு முழுவதிலுமிருந்து பல பிரமுகர்களை உள்ளடக்கிய எட்டு பேர் கொண்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக 2001 இல் கேயார் (இந்திய திரைத்துறை திரையுலகம் தொடர்பாக) இருந்தார்.

தமிழகத் திரைப்படத்துறையின் நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவிலும் இவர் உறுப்பினராக பணியாற்றினார்.

Remove ads

திரைப்படவியல்

இயக்குநராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

விநியோகத்தராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

நடிகராக

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads