தேசிய நெடுஞ்சாலை 32 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 32 (National Highway 32; NH 32) தேசிய நெடுஞ்சாலை. இது இந்தியா வின் ஒரு முக்கிய சாலை ஆகும். சென்னையில் தொடங்கி தூத்துக்குடியில் முடிவடைகிறது. [1] [2] இது கிழக்கு கடற்கரை சாலை என்றும் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

5 டிசம்பர் 2017 அன்று அறிவிப்பின்படி இந்த நெடுஞ்சாலை தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. [3]

Remove ads

பாதை

இந்தப் பாதை தே. நெ. 48 அருகில் சென்னையில் ஆரம்பித்து, செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் , நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி,தொண்டி, தேவிபட்டினம், ராமநாதபுரம் பைபாஸ், திருபுல்லானி, கீழகரை, ஏர்வாடி, வாலிநோக்கம், சாயல்குடி, வெம்பார், வைப்பாறு, குலத்தூர், வேப்பலோடை, பட்டிநாமருதூர், வழியாக தே. நெ. 44ல் தூத்துக்குடி அருகில் முடிவடைகின்றது.[3]

Remove ads

சந்திப்புகள்

தே.நெ. 48 சென்னை அருகில் முனையம். [3]
தே.நெ. 132B செங்கல்பட்டு அருகில்
தே.நெ. 132 திண்டிவனம் அருகில்
தே.நெ. 77 திண்டிவனம் அருகில்
தே.நெ. 332 புதுச்சேரி அருகில்
தே.நெ. 332A புதுச்சேரி அருகில்
தே.நெ. 532 கடலூர் அருகில்
தே.நெ. 81 சிதம்பரம் அருகில்
தே.நெ. 136B சீர்காழி அருகில்
தே.நெ. 83 நாகப்பட்டினம் அருகில்
தே.நெ. 83 திருத்துரைபூண்டி அருகில்
தே.நெ. 85 தொண்டி அருகில்
தே.நெ. 536 தேவிப்பட்டினம் அருகில்
தே.நெ. 87 இராமநாதபுரம் அருகில்
தே.நெ. 38 தூத்துக்குடி அருகில் முனையம்
Remove ads

காலக்கோடு

தேசிய நெடுஞ்சாலை 45A ஆனது தேசிய நெடுஞ்சாலை 32 ஆக எண் மாற்றம் செய்யப்பட்டது.[4]

2018ல் பாரத்மாலா பரியோஜனா கட்டம்-1 இன் கீழ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பின்வரும் விழுப்புரம் - புதுச்சேரி - பூண்டியான்குப்பம் - சட்டநாத புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவை கலப்பின(Hybrid annuity) வருடாந்திர முறையில் மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விருது கடிதத்தை (LOA) வெளியிட்டுள்ளது.[5][6][7]

பின்வரும் கட்டங்களாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.[8][9][10]

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், திட்டம் ...
  • 25 பிப்ரவரி 2021 அன்று பிரதமர் நரேந்திர மோதி தேசிய நெடுஞ்சாலை 32ன் பகுதிகளான சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையே 2426 கோடி மதிப்பினில் 56கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.[11][12]
  • 06 ஏப்ரல் 2025 அன்று பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 32ன் பகுதிகளான பூண்டியான்குப்பம் - சட்டநாதபுரம் வரையிலான 56.8 கி.மீ நீளத்திற்கும், தே.நெ 332 விழுப்புரம் - புதுச்சேரி வரையிலான 29 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழியாக மாற்றப்பட்ட சாலையினை நாட்டிற்கு அர்பணித்தார்.[13][14]
  • தே.நெ. 32ன் பகுதியான நாகப்பட்டினம் - தூத்துக்குடி வரையிலான 332கி.மீ கிழக்கு கடற்கரை சாலை ரூ.7000கோடியினில் நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.[15][16]

நன்மைகள்

  • முன்பு குறுகிய இருவழிப்பாதைகளாக இருந்தன, இதனால் இரவு நேரத்தில் பயணம் செய்வது கடினமாக இருந்தது.[17]
  • ஜிப்மர், காரைக்கால், ஜிப்மர், புதுச்சேரி ஆகிய இரு மருத்துவமனைகளையும் மக்கள் எளிதில் சென்றடையும் வண்ணம் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை செயல்படுகின்றது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads