1503
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1503 (MDIII) ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- மே 10 - கொலம்பசு கேமன் தீவுகளைக் கண்டுபிடித்து, அங்கு பெருமளவு கடல் ஆமைகளைக் கண்டமையால் அத்தீவுகளுக்கு லாசு டோர்ட்டுகாசு என்ற பெயரிட்டார்.
- மே 13 - நாபொலி எசுப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது.
- மே 20 - அசென்சன் தீவை முதற்தடவையாக போர்த்துக்கீசத் தளபதி அபோன்சோ டி ஆல்புர்கெக் என்பவர் கண்ணுற்றார்.[1]
- மே 28 - இசுக்கொட்லாந்து இராச்சியத்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இவ்வுடன்பாடு பத்து ஆண்டுகள் வரையே நீடித்தது.
- சூலை 23 - இந்நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்று வட்டத்துக்கு வெளியே வந்தது, அது அங்கு 233 ஆண்டுகள் வரை தங்கியிருந்தது.
- சூலை 30 - செயிண்ட் எலனா முதற்தடவையாக போர்த்துக்கீச மாலுமி எஸ்டேவோ டெ காமாவினால் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3][4]
- செப்டம்பர் 22 - மூன்றாம் பயசு 215வது திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், அவர் அக்டோபர் 18 இல் இறந்தார்.
- அக்டோபர் 30 - எசுப்பானியாவின் முதலாம் இசபெல்லா பழங்குடிகளுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தடை விதித்தார்.
- அக்டோபர் 31 - இரண்டாம் யூலியசு 216வது திருத்தந்தையானார்.
- வாஸ்கோ ட காமா இந்தியாவின் முதலாவது போர்த்துக்கீசக் கோட்டையை கொச்சியில் அமைத்தார்.
- இங்கிலாந்தின் கேன்டர்பரி பேராலயம் 433 ஆண்டுகளின் பின்னர் கட்டி முடிக்கப்பட்டது.
- லியொனார்டோ டா வின்சி மோனா லிசாவை வரைய ஆரம்பித்தார்.
Remove ads
பிறப்புகள்
- டிசம்பர் 14 - நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
இறப்புகள்
- அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1408)
மேற்கோள்கள்
1503 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads