1603
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1603 (MDCIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 25 - போர்த்துக்கீசக் கப்பல் சான்டா கத்தரீனா சிங்கப்பூர் அருகே டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களால் கைப்பற்றப்பட்டது. இந்தோனேசியாவின் பான்டென் நகரில் முதலாவது நிரந்தர டச்சு வணிக மையம் நிறுவப்பட்டது.
- மார்ச் 24 - 1558 முதல் ஆண்டு வந்த இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ரிச்மண்ட் மாளிகையில் காலமானார்.[1]
- ஏப்ரல் 28 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியின் இறுதி நிகழ்வுகள் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இடம்பெற்றது.
- சூலை 25 - முதலாம் ஜேம்சு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.[1]
- டிசம்பர் 22 - உதுமானியப் பேரரசு சுல்தான் மூன்றாம் மகமது இறந்தார். அவரது மகன் முதலாம் அகமது புதிய சுல்தானாகப் பதவியேற்றார்.
- உருசியப் பஞ்சம் தொடர்ந்தது.
- ஜோஹன் பாயர் வானக்கோளம் முழுவதையும் காட்டும் முதலாவது நிலவரைஉரனோமெட்ரியாவை வெளியிட்டார்.[2]
Remove ads
பிறப்புகள்
- அக்டோபர் 10 - ஏபெல் டாஸ்மான், டச்சு நாடுகாண் பயணி (இ. 1659)
- ஏப்ரல் 21 - ஆறாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1637)
- எப்ரேம் தெ நேவேர், சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (இ. 1695)
இறப்புகள்
- மார்ச் 24 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி (பி. 1533)
மேற்கோள்கள்
1603 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads