1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ( 1964 Summer Olympics) அலுவல்முறையாக XVIII ஒலிம்பியாடு விளையாட்டுப் போட்டிகள் (第十八回オリンピック競技大会 Dai Jūhachi-kai Orinpikku Kyōgi Taikai),சப்பானின் தோக்கியோவில் 1964ஆம் ஆண்டு அக்டோபர் 10 முதல் 24 வரை நடத்தப்பட்ட பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். தோக்கியோ நகருக்கு 1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவாயிருந்தது; ஆனால் சப்பான் சீனா மீது படையெடுத்ததால் இந்த வாய்ப்பு எல்சிங்கிக்குத் தரப்பட்டது; ஆனால் இதுவும் இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது.

விரைவான உண்மைகள்

1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆசியாவில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்களாகும். இந்த விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக விளையாட்டுக்களில் இனவொதுக்கலை கண்டித்து தென்னாபிரிக்கா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.[1][2] (இருப்பினும் தென்னாபிரிக்கா 1964இல் தோக்கியோவில் நடந்த மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.)[3] தோக்கியோவிற்கு ஒலிம்பிக்கை ஏற்றுநடத்தும் உரிமையை மேற்கு செருமனியில் மே 26, 1959இல் கூடிய 55வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அமர்வு வழங்கியது.

Remove ads

நடத்தும் நகரத் தேர்வு

மேற்கு செருமனியின் மியூனிக் நகரில் மே 26, 1959இல் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 55வது அமர்வில் தோக்கியோவிற்கு ஒலிம்பிக்கை நடத்தும் உரிமை வழங்கப்பட்டது; டிட்ராய்ட், பிரசெல்சு மற்றும் வியன்னா நகரங்கள் தோல்வியுற்றன.[4]

1960இல் தனது முயற்சியில் தோற்ற ரொறன்ரோ மீண்டும் 1964க்கு முயன்றது; ஆனால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. [5]

மேலதிகத் தகவல்கள் நகரம், நாடு ...
Remove ads

பங்கேற்ற தேசிய ஒலிம்பிக் குழுக்கள்

Thumb
போட்டியாளர்கள்
Thumb
நாடு வாரியாக மெய்வல்லுநர்கள்

1964ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மொத்தம் 93 நாடுகள் பங்கேற்றன. 16 நாடுகள் முதன்முதலாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன: அல்சீரியா, கமரூன், சாட், கொங்கோ, கோட் டிவார் (ஐவரி கோஸ்ட் என), டொமினிக்கன் குடியரசு, லிபியா (போட்டியிடவில்லை), மடகாசுகர், மலேசியா, மாலி, மங்கோலியா, நேபாளம், நைஜர், வடக்கு ரொடீசியா (நிறைவு விழாவன்று சாம்பியா என்ற முழுச் சுதந்திர நாடானது), செனிகல், மற்றும் தன்சானியா (தாங்கனியகா என). கிழக்கு செருமனியிலிருந்தும் மேற்கு செருமனியிலிருந்தும் போட்டியாளர்கள் செருமானிய ஐக்கிய அணி என 1956 முதல் 1964 வரை பங்கேற்று வந்தனர். 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது இசுரேல், தாய்வான் நாட்டு விளையாட்டாளர்களுக்கு அனுமதி விசா வழங்க மறுத்தமையால் இந்தோனேசியா தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.


மேலதிகத் தகவல்கள் பங்கேற்கும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் ...
  •  லிபியாவும் துவக்கவிழாவில் கலந்து கொண்டது; ஆனால் அதன் ஒரே மெய்வல்லுநர் (மராத்தான் போட்டியாளார்) போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.[8]
Remove ads

பதக்கங்கள்

1964 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் மிகக் கூடுதலாக பதக்கங்கள் வென்ற முதல் பத்து நாடுகள்:

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

மரபார்ந்து, நாடுகள் முதலில் அவை பெற்ற தங்கப் பதக்கங்கள், பின்னர் வெள்ளிப் பதக்கங்கள் இறுதியாக வெங்கலப் பதக்கங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.[9]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads