எகிப்தின் நான்காம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எகிப்தின் நான்காம் வம்சம் (Fourth Dynasty of ancient Egypt (notated Dynasty IV) பழைய எகிப்து இராச்சியத்தின் பிரமிடுக் காலம் அல்லது பொற்காலம் எனக்கருதப்படுகிறது. இவ்வம்சத்தவர்கள் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2613 முதல் கிமு 2494 முடிய ஆண்டனர்.[1] இவ்வம்சத்தவர் பண்டைய எகிப்தை ஆண்ட காலத்தில் அமைதி மற்றும் செழிப்புடன் நிலவியது. மேலும் பிற நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தகங்களை ஆவணப்படுத்தப்பட்ட காலமாகும்.

எகிப்தின் நான்காம் வம்ச பார்வோன்கள் ஆட்சியில் இறந்த மன்னர்களின் உடலை பதப்படுத்தி உயரமான பிரமிடு கட்டிடங்களில் அடக்கம் செய்யும் வழக்கம் செழித்தோங்கியது. இவ்வம்ச ஆட்சியில் பண்டைய எகிப்தில் சித்திரக் கலை, சிற்பக் கலை மற்றும் கட்டிடக் கலை வளர்ந்தது. பார்வோன் சினெபெரு காலத்தில் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைகான மஸ்தபா எனும் படிக்கட்டு பிரமிடு கட்டிடங்கள் கீசா நகரத்தில் நிறுவப்பட்டது.[2] இவ்வம்சத்தின் ஒவ்வொரு பார்வோனும் தனக்கென குறைந்தது ஒரு நினைவுச் சின்னமாக கல்லறைப் பிரமிடு நிறுவினார்கள்.
பழைய எகிப்திய இராச்சிய இராச்சியத்தை நிறுவுவதில், நான்காம் வம்சத்தவர்கள் இரண்டாவதாக விளங்கினர்கள். நான்காம் வம்சத்தின் முதல் பார்வோன் சினெபெரு மேற்கில் பண்டைய லிபியா, கிழக்கில் சினாய் தீபகற்பம், தெற்கில் நூபியா வரையிலான நிலப்பரப்புகளை வென்று எகிப்தின் பழைய இராச்சியத்தை விரிவாக்கினார். பழைய எகிப்திய இராச்சியத்தின் கீசா நகரத்தின் கிசாவின் பெரிய பிரமிடு உள்ளிட்ட பிரமிடுகளின் தொகுதிகளாலும், பெரிய ஸ்பிங்ஸ்களாலும் புகழ்பெற்றது.
Remove ads
நான்காம் வம்ச ஆட்சியாளர்கள்
நான்காம் வம்ச கால வரிசை

Remove ads
சினெபெரு
பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்ச மன்னர்களில் முதலாமவர் பார்வோன் சினெபெரு ஆவார். இவர் மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் வென்று பண்டைய எகிப்தை ஒரே குடையின் கீழ் ஆண்டவர். நடு எகிப்தில் பிறந்த சினெபெரு, எகிப்தின் பட்டத்து இளவரசியை மணந்ததன் மூலம் எகிப்தின் மன்னரானவர் சினெபெரு தன்னை எகிப்திய சூரியக் கடவுளான இராவின் அவதாரம் என அழைத்துக் கொண்டார். சினெபெருவின் மகன் கூபுகூபுவும் தன்னை சூரியக் கடவுளின் அவதாரம் எனக் கூறிக்கொண்டார்.
பழைய எகிப்திய இராச்சியத்தில் இரண்டு அதிகார மையங்கள் விளங்கின. ஒன்று பார்வோன்கள் மற்றவர்கள் எகிப்தியக் கோவில்களின் தலைமைப் பூசாரிகள். பார்வோன்கள் மக்களை கோவில் பூசாரிகள் மூலம் மட்டும் ஆள முடியும். பண்டைய எகிப்தியக் கடவுள்களின் தெய்வீகச் சக்தி கொண்டவர்களாக பார்வோன்கள் சித்தரிக்கப்பட்டு, பார்வோன்களுக்கு கோயில்களும் எழுப்பப்பட்டது.
பார்வோன் சினெபெரு முதலில் கட்டிய நேர்த்தியான பிரமிடாக இருப்பினும் வளைந்து இருந்தது. மேலும் இவர் நிறுவிய சுண்ணாம்புக் கல் சிவப்பு பிரமிடு அகலமாகவும், உயரமாகவும் உள்ளது.[3] சினெபெரு கீசாவில் மொத்தம் மூன்று பிரமிடுகளை எழுப்பினார். பிரமிடுகளைக் கட்டுவதற்கு தேவையான தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்காக, மன்னர் சினபெரு வெளிநாடுகளின் மீது குறிப்பாக லிபியா, நூபியா மீது படையெடுத்து, 11,000 போர்க் கைதிகளையும், 13,000 விலங்குகளையும் எகிப்திற்கு கொண்டு வந்தார்.
Remove ads
பிரமிடு காலத்திய பிற மன்னர்கள்
மன்னர் கூபு

மன்னர் சினெபெருக்குப் பின்னர் எகிப்தின் அரியணை ஏறிய பார்வோன் கூபு, கீசா நகரத்தில் கட்டிய தனது தனது கல்லறை பிரமிடை கட்டினார். இவரது கல்லறைக் கோயில், பிந்திய காலத்தில் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டது.[4]
மன்னர் ஜெதெப்பிரே
கூபுவிற்குப் பின்னர் அரியணை ஏறிய ஜெத்தேபிரே எட்டு ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். இவர் தனது கல்லறைக்கான பிரமிடை கீசா நகரத்திற்கு வடக்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் கட்டினார். கல்லறையில் இவர் தனது பட்டத்து இராணி இரண்டாம் ஹெடேப்பியரசின் உருவத்தை ஸ்பிங்கசு வடிவத்தில் அமைத்தார்.
காப்ரா
26 ஆண்டு காலம் ஆண்ட மன்னர் காப்ரா தனது கல்லறைப் பிரமிடை, மன்னர்களின் சமவெளியில் கீசா நகரத்தில் தனது தந்தை கூபுவின் பிரமிடுவிற்கு அருகே நிறுவினார். மேலும் பிரமிடுவுக்கு முன் பகுதியில், தனது சிறப்பை விளக்க பெரிய ஸ்பிங்ஸ் ஒன்றை நிறுவினார்.[5]

மென்கௌரே
மன்னர் மென்கௌரே தனது பிரமிடை கீசா நகரத்தில் மிகச்சிறிய அளவில் நிறுவினார். எரிமலை கற்களாலான இந்த பிரமிடு எட்டு அடி நீளமும், மூன்று அடி உயரமும் கொண்டது.
மன்னர் செப்சேஸ்காப்
எகிப்தின் நான்காம் வம்சத்தின் இறுதி மன்னராக செப்சேஸ்காப் கருதப்படுகிறார். இவர் தனது பிரமிடு கல்லறையை, முந்தைய மன்னர்கள் கட்டிய பிரமிடுகளின் வடிவத்தில் கட்டாது, முக்கோண வடிவிலான கற்களைக் கொண்டு முக்கோண வடிவில் பிரமிடைக் கட்டினார். [6]
பண்டைய எகிப்திய வம்சங்கள்
இதனையும் காண்க
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads