தேசிய நெடுஞ்சாலை 75 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 75 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 75 (National Highway 75 (India)) என்பது இந்தியாவின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். இது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[1][2] 2010ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை எண்களை மறு எண்ணிடும் முன்பு இந்த தேசிய நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 48 (NH-48) என அறியப்பட்டது. மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான மங்களூரை (மங்களூரு) கிழக்கில் வேலூர் நகரத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலை இதுவாகும்.[3] தே. நெ. 75 கர்நாடகா மாநிலத்தின் மூன்று புவியியல் பகுதிகளான கரவாலி, மலேநாடு மற்றும் பயலுசீமே வழியாகப் பயணிக்கிறது.[4]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைகள்

கர்நாடக மாநில சாலை 54 (பேலூர் சாலை), தேசிய நெடுஞ்சாலை 373, தேசிய நெடுஞ்சாலை 69

வழித்தடம்

Thumb
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

இது கர்நாடகா மாநிலத்தில் உள்ள வந்தவாழில் தொடங்கி நெல்லியடி, சீராடி காட், சக்லேஷ்பூர், ஹாசன், பெங்களூரு, கோலார், முளுபாகிலு, வெங்கடகிரி கோட்டை, பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி வழியாகத் தமிழ்நாட்டின் வேலூரில் முடிவடையும்.[2]

மாநில வாரியாக பாதை நீளம் கி.மீ.[5]

Remove ads

சந்திப்புகள்

தே.நெ. 73 முனையம் பேண்ட்வால் அருகில்
தே.நெ. 275 பேண்ட்வால் அருகில்
தே.நெ. 373 ஹாசன் அருகில்
தே.நெ. 150A பேளூரில் குறுக்கீடு
தே.நெ. 48 நெலமங்களா அருகில்
தே.நெ. 44 ஹேபல் அருகில்
தே.நெ. 340 கோசுகோட் அருகில்
தே.நெ. 648 கோசுகோட் அருகில்
தே.நெ. 69 முள்பாகல் அருகில்
தே.நெ. 42 வேங்கடகிரி கோட்டை அருகில்
தே.நெ. 48 முனையம் வேலூர் அருகில்.

விரிவாக்கம்

06 மார்ச் 2019 அன்று பிரதமர் நரேந்திர மோதி தே.நெ 75ன் பகுதிகளான வேலூர் மாவட்டத்தில் பக்கச்சாலையுடன் கூடிய இரண்டு வழிச் சாலைகாளாக குடியாத்தம் புறவழிச்சாலை மற்றும் வேலூர் புறவழிச்சாலையை மேம்படுத்த அடிக்கல் நாட்டினார்.[6]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads