இரண்டாம் பரமேஸ்வரவர்மன்

From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
Remove ads

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (இறப்பு 730/731 ) என்பவன் பல்லவ மரபின் ஒரு மன்னனாவான்.இவன் சாளுக்கிய அரசனான விஜயாதித்தனின் படைகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டான்.

மேலதிகத் தகவல்கள் பல்லவ சிம்ம கொடி, பல்லவ மன்னர்களின் பட்டியல் ...

இவர் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது ஆட்சி செலுத்தி இருக்க வேண்டும்.[1]

Remove ads

போரும்,மரணமும்

இவனது ஆட்சியின்போது கி.பி.729/730 காலகட்டத்தில் சாளுக்கிய இளவரசனாக இரண்டாம் விக்ரமாதித்தன் இருந்த காலத்தில் விக்ரமாதித்தனின் நண்பனான மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பா சாளுக்கியர்களின் படைகளுடன், பல்லவர்களைத் தாக்கி இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தினான். பரமேசுவரன் வேறு வழியின்றி சமாதானம் செய்துகொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்றான். பரமேசுவரன் போரில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க எண்ணி, கொஞ்ச காலத்திற்கு பிறகு கி.பி.731இல் மேலைக் கங்க மன்னன் சிறீபுருசன் மீது ஒரு எதிர்த் தாக்குதல் செய்தான். விலந்து என்ற இடத்தில் நடந்த இந்தப் போரில் சிறீபுருசனால் இவன் கொல்லப்பட்டான். சிறீபுருசன் இவனின் முத்திரை, வெண்கொற்றக் குடை போன்றவற்றைக் கைப்பற்றி பெருமானடி என்ற பட்டம் பெற்றான். [2] இந்த சாளுக்கிய வெற்றி விஜயாதித்தன் ஆட்சியின் போது நடந்தது என்றாலும், சாளுக்கிய அரசர்கள் பதிவுகள் இவ்வெற்றி இரண்டாம் விக்ரமாதித்யனைச் சேருவதாக புகழ்கின்றன

Remove ads

மேற்கோள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads