முதலாம் பரமேஸ்வரவர்மன்

From Wikipedia, the free encyclopedia

முதலாம் பரமேஸ்வரவர்மன்
Remove ads

முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 610 - 685)[1] தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னர்களில் ஒருவர். இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு பல்லவ மன்னனாக முதலாம் பரமேஸ்வரவர்மன் பதவியேற்றார்[2]. இம்மன்னரின் பாட்டனார் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர்கள், சாளுக்கியர்களையும், வாதாபி மன்னர்களையும் வென்று தென்னிந்தியாவில் பலம் வாய்ந்த பல்லவர் ஆட்சியை நிறுவியிருந்தார். பரமேஸ்வரவர்மன் அரசியல் மற்றும் போர் விவகாரங்களில் தேர்ந்த மன்னனாக இருந்தார். இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.

மேலதிகத் தகவல்கள் பல்லவ சிம்ம கொடி, பல்லவ மன்னர்களின் பட்டியல் ...
Remove ads

கோயில்கள்

இவர் சைவ சமயத்தை தழுவி சிறந்த சிவ பக்தராக திகழ்ந்தார். சிவபெருமானுக்கு பல ஆலயங்கள் எழுப்புவித்தார். அதில் முக்கியமாது காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில்.[3] "பரமேசுவரவர்மன் சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களைக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றூரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் 'பரமேசுவர மங்கலம்' எனத் தன் பெயர் பெற்ற சிற்றூரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுவர க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.[4]

Remove ads

போர்கள்

இம்மன்னரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக, முதலாம் விக்கிரமாதித்யன் தலைமையிலான சாளுக்கியபடைகளுடன் போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. முதலாம் விக்கிரமாதித்யன், பரமேஸ்வரவர்மனின் பாட்டனான முதலாம் நரசிம்ம வர்மனுடன் போர்கள் புரிந்தவர். மேலும் கன்னட மன்னர்கள் மற்றும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுடன் தோழமை கொண்டிருந்தார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads