இரண்டாம் நரசிம்ம பல்லவன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுள் ஒருவர். இவர் பல்லவ நாட்டை 40 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளார். சாளுக்கியர்களுடைய தொல்லைகள் குறைந்திருந்த காரணத்தால் இவருடைய ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி அமைதிக் காலமாக விளங்கியது எனலாம்[1]. இதனால் சமயம், இலக்கியம், கட்டிடக்கலை முதலிய துறைகளில் ஆக்கப்பணிகள் நடைபெற்றன.


இவர் ஒரு சைவன் ஆவார். இதனால் இவர் காலத்தில் சைவசமயம் முனைப்புடன் முன்னேற்றம் கண்டது. பல கோயில்களையும் எழுப்பியுள்ளார். சமஸ்கிருத இலக்கிய, இலக்கண வளர்ச்சியில் இராசசிம்மன் பெரிதும் அக்கறை காட்டியதாகத் தெரிகின்றது. சமஸ்கிருதப் புலவர்களை இவர் ஆதரித்துவந்தார்.
மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் இராசசிம்மனால் கட்டுவிக்கப்பட்டவையே. காஞ்சிபுரத்திலுள்ள, எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலும் இவர் திருப்பணியே ஆகும்.
இவரது ஆட்சியின் இறுதிக்காலத்தில் சாளுக்கியரினால் மீண்டும் தொல்லைகள் ஆரம்பித்தன. அவர்களுடன் ஏற்பட்ட போரில் தனது மூத்த மகனை இழந்தார். இதன் பின் சிறிது காலத்தில் இராஜசிம்மனும் இறந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads