நிருபதுங்கவர்மன்
பல்லவ மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிருபதுங்கவர்மன் (Nirupatungkavarman) காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் மன்னனாவார். இவர், மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவியின் மூத்த மகன். மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு நிருபதுங்கவர்மன் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் கம்பவர்மனின் புதல்வன் அபராசித வர்மன்[1] அரச பதவியைக் கைப்பற்ற எண்ணியதால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது. நிருபதுங்கவர்மன், இரண்டாம் வரகுண பாண்டியனிடம் உதவிப் பெற்றுக்கொண்டார். கங்கரும் சோழரும் அபராசிதவர்மனுக்கு உதவி புரிந்தனர். வாரிசு உரிமைப் போரில் அபராசிதவர்மன் வெற்றி பெற்றார். நிருபதுங்கவர்மன் இழந்த நாட்டை மீண்டும் பெற முயன்றும் வெற்றி கிட்டவில்லை. சோழருடைய ஆதரவை அபராசிதவர்மன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் ஆகும்[2].
இவருடைய அமைச்சர்களில் ஒருவர் பாகூரிலிருந்த ஒரு கல்வி மையத்திற்கு மூன்று கிராமங்களைத் தானமாக அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது[3].
Remove ads
சமயம்
நிருபதுங்கவர்மன் சைவ சமயத்தினையும் (பரமேசுவரமங்கலம் சைலேசுவரம் கோயில் நிருபதுங்கவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது[4]), வைணவ சமயத்தையும் (பாகூர் பட்டயங்கள்)[5] ஆதரித்ததாகத் தெரிகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads