மூன்றாம் நந்திவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூன்றாம் நந்திவர்மன் (Nandivarman III) என்பவர் பல்லவ மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிகாலம் 825-850. இவர் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் பேரனும் தந்திவர்மனின் மகனுமாவார். இவருக்கு இரு மனைவியர்கள் மற்றும் இரு மகன்கள். பல்லவப் பேரரசை இரு பகுதிகளாகப் பிரித்து தென் பகுதியை நிருபதுங்கவர்மனுக்கும், வட பகுதியை கம்பவர்மனுக்கும் (பழுவேட்டரையரின் புதல்வி கண்டன் மாறம்பாவையரின் மகன்) கொடுத்தார்[1].
Remove ads
ஆட்சி
மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்றது. தனது தந்தையின் காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த பல்லவர்கள் ஆட்சியை இவர் மீண்டும் வலுப்படுத்தினார். இராஷ்டிரகூடர்களுடன் கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு பாண்டியர்களை காஞ்சிக்கருகில் உள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் தோற்கடித்தார். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை வைகையாறு வரை விரட்டிச் சென்றார். ஆனால் பின்பு பாண்டிய மன்னன் சீவல்லபன் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் தோற்கடிக்கவும் செய்தார்[2].
இம்மன்னரின் கப்பற்படை மிகவும் வலிமைமிக்கதாக இருந்துள்ளது. இவர் கடல்கடந்து சயாம் மற்றும் மலாயா நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
Remove ads
சமயம்
மூன்றாம் நந்திவர்மன் சைவ சமயத்தை சார்ந்தவராக இருந்தார்[3].
நந்திக் கலம்பகம் இம்மன்னரை பற்றியது; இவன் போர்ச் செயல்களையும் நகரங்களையும் பிறவற்றையும் விளக்கமாகக் குறிப்பது. இவ்வரசன் 'பல்லவர் கோன்', மல்லை வேந்தன். மயிலை காவலன், காவிரிவளநாடன், எனப் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளார். இவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவர் என்று செய்யுள் 104, 107 கூறுகின்றன.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads