தென்காசி
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்காசி (Tenkasi) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின், தென்காசி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
Remove ads
புவியியல்
இவ்வூர், (8.9564°N 77.3152°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 182.08 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசியில் கோயில் கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி 'காசிவிசுவநாதர் கோயில்' மற்றும் கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[2] முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலகட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (பொ.ஊ. 1422–61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. தென்காசி நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,545 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 87.7% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.04%, பெண்களின் கல்வியறிவு 82.52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தென்காசியில் இந்துக்கள் 62.26%, முஸ்லிம்கள் 34.79%, கிறிஸ்தவர்கள் 2.79%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01% மற்றும் சமயமில்லாதவர்கள் 0.14% பேர்களும் உள்ளனர்.
புதிய மாவட்டமாக உதயமாதல்
தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒர் புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்து 2016 ஆம் ஆண்டு முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக திருநெல்வேலியில் இருந்து சில பகுதிகளை கொண்டு 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி சட்டப்பேரவையில், தமிழகத்தின் அப்போதையை முதலமைச்சர் க .பழனிசாமி, தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் விதி எண் 110-ன் கீழ் என அறிவித்தும், பின் அந்த மாவட்டத்திற்கு புதிதாக இ. ஆ. ப சார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்கப்பட்டார்.
Remove ads
வணிகம்
தென்காசியில் வணிகம் மிகவும் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. எனினும் எந்த தொழிற்சாலையும், பெரிய உற்பத்தி நிலையமோ இல்லை. எனினும் பல பாரம்பரியம் மிக்க துணியகங்கள் இங்கு உள்ளன. தற்போது வந்துள்ள நவீன உணவகங்களால் இந்நகரம் சிறப்படைந்துள்ளது. நகை கடைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை வணிகமும் நடைபெறுகின்றன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
தென்காசி நகராட்சியானது தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த தனுஷ் எம். குமார் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை காங்கிரசு கட்சியை சேர்ந்த எச். பழனி நாடார் வென்றார்.
Remove ads
போக்குவரத்து
தொடருந்து போக்குவரத்து
தென்காசியின் மையப்பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
- சென்னை- செங்கோட்டை- சென்னை பொதிகை அதிவிரைவு வண்டி தினமும் உண்டு.
- சிலம்பு விரைவு வண்டி (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை)
- சென்னை - கொல்லம் தினசரி விரைவுத் தொடர்வண்டி (வழி: செங்கோட்டை)
- மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர்) செங்கோட்டை வரையான பயணிகள் ரயில் தினசரி காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் இயக்கப்படும். தினமும் மதியம் திருநெல்வேலியிலிருந்து - கொல்லத்துக்கு பயணிகள் ரயில் இயக்கம் உள்ளது.
- திருநெல்வேலியிலிருந்து - செங்கோட்டை (வழி - டவுன், பேட்டை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழக்கடையம், பாவூர்சத்திரம்) வரையான பயணிகள் இரயில் மொத்தம் நான்கு வேளையும் உள்ளது.
- திருநெல்வேலி - பாலக்காடு தினசரி விரைவுவண்டி (வழி - அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர்)
பேருந்து போக்குவரத்து
இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம் ஆகும்.
தென்காசியிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம்,கடையம், பாபநாசம், செங்கோட்டை, சங்கரன்கோவில், புளியங்குடி,கோவில்பட்டி, இராஜபாளையம், மதுரை, தேனி, குமுளி, போடி, விருதுநகர், திருச்சி, தஞ்சை, திருப்பூர், சிவகாசி, சென்னை, கோயமுத்தூர், சேலம், ஈரோடு, சத்தியமங்கலம், வேளாங்கண்ணி, சிதம்பரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர் என தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், சங்கனாச்சேரி, திருவனந்தபுரம், புனலூர், அம்பநாடு, கொட்டாரக்கரை, காயம்குளம், எர்னாகுளம், கோழிக்கோடு, கருநாகப்பள்ளி, மாவேலிக்கரை போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.
விமான நிலையங்கள்
- மதுரை வானூர்தி நிலையம் (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்),
- திருவனந்தபுரம் வானூர்தி நிலையம் (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்),
- தூத்துக்குடி வானூர்தி நிலையம் (சிற்றுந்தில் 2.5 மணி நேர பயணம்)
Remove ads
கல்வி நிறுவனங்கள்
வங்கிகள்
- தமிழ்நாடு கிராம வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- இந்தியன் வங்கி
- கனரா வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர்
- கரூர் வைஸ்யா வங்கி
- சிட்டி யூனியன் வங்கி
- பேங்க் ஆஃப் பரோடா
- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, குத்துக்கல்வலசை
- ஐ.டி.பி.ஐ வங்கி
- யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 1986 வது வருடம் பொது மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்டு, பல்வேறு மருத்துவ துறைகளுடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தினசரி 1500 - 2000 வரை வெளிநோயாளிகள் சிகிச்சைபெற்று செல்கின்றனர் . மேலும் 337 படுக்கை வசதிகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு அனைத்து சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
ஆலயங்கள்
கோயில்கள்
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
- மேல முத்தார அம்மன் கோயில்
- திருவிலஞ்சி பெருமான் கோவில்
- குற்றாலநாதர் திருக்கோவில்
- ஆய்க்குடி பாலசுப்பிரமணி திருக்கோவில்
- திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில், திருமலைக்கோவில்
- சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் திருக்கோவில், சிவசைலம்
- மேல சங்கரன் கோவில், தென்காசி
- கிழ சங்கரன் கோவில், தென்காசி
- திரிபுர சுந்தரி அம்மன் கோவில்
- அணைக்கரை விநாயகர் கோவில்
- சிதம்பரேஷ்வரர் கோவில்
- குல சேகர நாதர் கோவில்
- வரகுணநாதர் கோவில்
- பழனி ஆண்டவர் கோவில், யானைப்பாலம்
- ஒப்பனைப் பிள்ளையார் கோவில்
- விண்ணகரப்பெருமாள் கோவில்
- பொருந்திநின்ற பெருமாள் கோவில்
- வண்டிமலைச்சி அம்மன் கோவில்
- முத்தழகி அம்மன் திருக்கோவில்
- ஆனைமலை அய்யனார் கோவில்
- சுடலை மாடசுவாமி கோவில், ஆசாத் நகர்
- தோரணமலை முருகன் கோவில், கடையம்
- அருள்மிகு கற்பக நாச்சியார் அம்மன் கோவில், புன்னையாபுரம்
- அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், புளியங்குடி
- முப்புடாதி அம்மன் திருக்கோவில், கடையநல்லூர்
தேவாலயங்கள்
புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம் - தென்காசி கத்தோலிக்க வட்டாரத்தின் முதன்மை ஆலயமாகும். இது நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவில் இங்குள்ள இசுலாமியர்களும் பங்கு கொண்டு ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறார்கள்.[சான்று தேவை] கேரள பக்தர்கள் அதிகம் பேர் வருவதால் மலையாள மொழியிலும் வழிபாடு நடைபெறுகிறது. சர்வேசுவரன் கோவில் என்று பிற மதத்தவரால் அழைக்கப்படுகிறது.
பள்ளிவாசல்கள்
- வேம்படி மலுக்கர்ஷா ஜூம் ஆ பள்ளிவாசல்,
- புதுமனை - சொர்ணபுரம் மஸ்ஜிதுல் முபாரக் ஜூம் ஆ பள்ளிவாசல்
- செய்யது சுலைமான் பிர்ஜதே ஜூம் ஆ பள்ளிவாசல்,
- தவளபுரம் ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ஐந்து வர்ணம் பெரிய ஜூம் ஆ பள்ளிவாசல்,
- இஸ்மாயில் மீயான் ஜும்மா பள்ளிவாசல்,
- நடுப்பேட்டை ஜூம் ஆ பள்ளிவாசல்,
- பஜார் ஜூம் ஆ பள்ளிவாசல்
- மரைக்காயர் ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ராஜ் மியான் ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ஜாமியா அல்தாபூர் ரப்பானிய அரபிக் கல்லூரி ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ஆபாத் ஜூம் ஆ பள்ளிவாசல்,
- ஜமாலியா நகர் ஜூம்மா பள்ளி வாசல்,
- மாலிக்நகர் ஜூம்மா பள்ளி வாசல்,
- ஹௌத்துல் ஆலம் ஜூம்மா பள்ளி வாசல்,
- மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம் ஆ பள்ளிவாசல் (புதிய பேருந்து நிலையம்) @ நயினார் முஹம்மது ஜும்ஆ பள்ளிவாசல் அப்துல் கலாம் நகர்.
Remove ads
வானிலை மற்றும் காலநிலை
சுற்றுலா தலங்கள்
- ராமநதி அணை
- உலக அம்மன் கோவில்
- குற்றாலம்
- ஐந்தருவி
- புலியருவி
- பழைய குற்றாலம்
- குண்டாறு நீர்த் தேக்கம் (செங்கோட்டை)
- திருமலைக் கோவில்
- அடவிநயினார் நீர்த்தேக்கம்
- அச்சன்கோவில் (கேரள மாநிலம்)
- கருப்பாநதி அணைக்கட்டு
- கடனாநதி அணைக்கட்டு
- செண்பகதேவி அருவி
- பாலருவி
- தோட்டக்கலை துறை பூங்கா-ஐந்தருவி
- படகு குழாம்-குற்றாலம்
- திருமலை குமார சுவாமி கோவில்-பண்பொழி
புகழ்பெற்ற சிலர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
