சிறீவிஜயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீ விஜயம் (ஆங்கிலம்: Srivijaya; மலாய்: Srivijaya; இந்தோனேசியம்: Sriwijaya; srividʒaja; சமசுகிருதம்: श्रीविजय) என்பது இந்தோனேசியா, சுமத்திரா தீவை மையமாகக் கொண்ட பழைய பேரரசு ஆகும்.[2]

தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் இந்தப் பேரரசு பரவி இருந்தது. இந்த அரசு இருந்ததற்கான சான்றுகள் 7-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில் இருந்து கிடைத்து உள்ளன.[3]
இந்தோனேசியாவின் வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பேரரசு என்றால் அதுதான் சிறீ விஜய பேரரசு ஆகும்.[4] கி.பி. 650-ஆம் ஆண்டில் ஜெயநேசன் (Sri Jayanasa) என்பவர் உருவாக்கிய பேரரசு. 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுமை கொண்ட இந்தப் பேரரசு; ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தத் தென்கிழக்காசிய நாடுகளையே ஆட்சி செய்த மாபெரும் அரசாகும்.[5]
இந்த அரசு சுமாத்திராவை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசு உலக வரலாற்றில் இருந்து திடீரென்று மறைந்து போனது. ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கும் மேலாக சிறீ விஜய பேரரசைப் பற்றி யாருக்கும் எதுவுமே தெரியாமல் இருந்தது.[6]
1918-ஆம் ஆண்டு ஜார்ஜ் கோடெஸ் (George Coedès) எனும் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் சிறீ விஜய பேரரசைப் பற்றி ஆய்வுகள் செய்து பற்பல வரலாற்று உண்மைகளைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர்தான் சிறீ விஜய பேரரசின் இரகசியங்கள் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தன.[7] [8]
Remove ads
பொது
7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும்; 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில், சிறீ விஜய பேரரசு தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மேலாதிக்க நாடாக உச்சம் கண்டது. அண்டை நாடுகளான மாதரம் இராச்சியம், கோம் இராச்சியம் (Khom Empire) எனும் கெமர் பேரரசு (Khmer Empire) மற்றும் சம்பா இராச்சியம் (Champa) போன்ற நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தது. சில கட்டங்களில் அவற்றுக்குள் ஆதிக்கப் போட்டிகளும் இருந்தன.[9]
சிறீ விஜய பேரரசின் முக்கிய வெளிநாட்டு ஆர்வம் சீனாவுடன் இலாபகரமான வணிக ஒப்பந்தங்களை வளர்ப்பதாகும். இது தாங் அரசமரபு முதல் சொங் அரசமரபு வரை நீடித்தது. அத்துடன், வங்காளத்தில் பௌத்த பாலப் பேரரசு; மத்திய கிழக்கில் இசுலாமிய கலிபா ஆகியவற்றுடன் மத, பண்பாடு மற்றும் வணிகத் தொடர்புகளையும் கொண்டிருந்தது.[10]
சீனத் துறவி யி சிங்
சீன பௌத்த துறவியான யி சிங் (Yijing) என்பவர் தான் ஸ்ரீ விஜயத்தி்ல் கி.பி 671-ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் தங்கி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். சுமத்திராவி்ல் பலெம்பாங் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கெடுக்கான் புக்கிட் கல்வெட்டில் (Kedukan Bukit inscription) ஸ்ரீ விஜயம் என்ற பெயர் காணப்படுகிறது. இது 683-ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும்.[11]
மலாக்கா நீரிணை தென் சுமத்திரா கடற்கரைப் பகுதியில் பாங்கா தீவு உள்ளது. உலகின் அழகிய தீவுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தீவில் கோத்தா கப்பூர் எனும் ஒரு கிராமத்தில் தான் சிறீ விஜய பேரரசு காலத்தின் கல்வெட்டு கிடைத்தது. கோத்தா கப்பூர் கல்வெட்டு (Kota Kapur Inscription) என்று அழைக்கப்படுகிறது. இது பழைய மலாய் மொழியில் பல்லவ எழுத்து வடிவத்தில் வரிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.[12]:82
Remove ads
கோத்தா கப்பூர் கல்வெட்டு
கோத்தா கப்பூர் கல்வெட்டு கிடைத்த பின்னர் சிறீ விஜய பேரரசைப் பற்றிய உண்மையான வரலாறும் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது. 1892-ஆம் ஆண்டு ஜே.கே. டெர் மியூலன் (J.K. van der Meulen) என்பவர் மேற்கொண்ட அகழாய்வில் தான் கோத்தா கப்பூர் கல்வெட்டு கிடைத்தது. கோத்தா கப்பூர் கல்வெட்டில் கிடைத்த ஒரு முக்கியமான பதிவு, பிராமி மொழியில் எழுதப்பட்டு உள்ளது.[13]
Siddha titam hamba nvari i avai kandra kayet ni paihumpaan namuha ulu lavan tandrun luah makamatai tandrun luah vinunu paihumpaan hakairum muah kayet ni humpa unai tunai.
”சிறீ விஜய இராணுவ வீரர்கள் ஜாவாவை எதிர்கொள்கிறார்கள். சிறீ விஜய அரசின் வேண்டுகோளை ஜாவா ஏற்கனவே நிராகரித்து விட்டது. அதனால் சிறீ விஜய படையெடுப்பு செய்ய வேண்டி இருக்கிறது” என பொருள்படுகிறது[12]
கோத்தா கப்பூர் கல்வெட்டு ஒரு சின்னக் கோபுரம் போல செதுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அதன் உயரம் 177 செ.மீ. அகலம் 32 செ.மீ. தலைப்பாகத்தின் சுற்றுவட்டம் 19 செ.மீ. அதன் பின்னர் 1920 நவம்பர் 1-ஆம் தேதி தாலாங் துவோ (Talang Tuwo) கல்வெட்டு கிடைத்தது.
இதற்குப் பின்னர்தான் 1920 நவம்பர் 29ஆம் தேதி கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு (Kedukan Bukit Inscription) கிடைத்தது. இந்தக் கல்வெட்டுகள் தான் சிறீ விஜய பேரரசைப் பற்றிய இரகசியங்களை வெளியுலகத்திற்குத் தெரிய வைத்தன.
Remove ads
மறக்கப்பட்ட பேரரசு
சிறீ விஜயம் பேரரசின் அழிவிற்குப் பிறகு அந்தப் பேரரசு முற்றிலும் மறக்கப்பட்டது. தென்கிழக்காசியாவில் இந்தப் பேரரசு இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கணக்கில் கொள்ளவே இல்லை. 1918-ஆம் ஆண்டில் பிரெஞ்சு தூரக் கிழக்குப் பள்ளியின் பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர் ஜார்ஜ் கோடெஸ் (George Cœdès) என்பவர் இப்படி ஒரு பேரரசு இருந்து இருக்கும் என சொன்னார்.[14]
அதன் பின்னர் இந்தப் பேரரசு இருந்து இருக்கும் என அதிகாரப் பூர்வமாக சந்தேகிக்கப் பட்டது. 1993-ஆம் ஆண்டில் சுமாத்திரா தீவின் மூசி ஆற்றங்கரையில் (Musi River) பலெம்பாங் என்ற இடத்தில் இந்தப் பேரரசின் தலைநகரம் இருந்து இருக்கும் என நிரூபிக்கப்பட்டது.[15]
சொற்பிறப்பியல்

சிறீ ("ஸ்ரீ") விஜயா என்பது சமசுகிருதம்: श्रीविजय, श्रफिजा எனும் சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்ட பெயர் ஆகும். ஸ்ரீ (Śrī)[16] என்றால் "அதிர்ஷ்டசாலி", "வளமானவர்" அல்லது "மகிழ்ச்சியானவர்" என்று பொருள்படும். மேலும் இந்து மதத்தில் தெய்வீகத்தனமை என்றும் பொருள்படும். விஜய[17] என்றால் "வெற்றி" அல்லது "சிறந்தவர்" என்று பொருள்படும்[18] இவ்வாறு, ஸ்ரீ விஜயா என்ற கூட்டுச் சொல்லின் பொருள் "பிரகாசிக்கும் வெற்றி",[19] "அற்புதமான வெற்றி", "வளமான வெற்றியாளர்", "சிறப்பின் பிரகாசம்" அல்லது "புகழ்பெற்றவர்" என்பதாகும்
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சுமாத்திரா மற்றும் அண்டை தீவுகளின் கல்வெட்டுகளை ஆய்வு செய்த வரலாற்று ஆசிரியர்கள் "ஸ்ரீவிஜயா" என்ற சொல் ஒரு மன்னரின் பெயரைக் குறிக்கிறது என்று நினைத்தனர். 1913-ஆம் ஆண்டில், கண்டுபிடிக்கப்பட்ட 7-ஆம் நூற்றாண்டு கோத்தா கப்பூர் கல்வெட்டில் (1892-இல் கண்டுபிடிக்கப்பட்டது) "ஸ்ரீ விஜயா" என்ற பெயரை முதன்முதலில் அடையாளம் கண்டவர் கல்வெட்டு ஆசிரியர் எச். கெர்ன் (H. Kern) என்பவர் ஆவார்.
இருப்பினும், அந்த நேரத்தில் அது "விஜயா" என்ற மன்னரைக் குறிக்கலாம் என்றும்; "ஸ்ரீ" என்பது ஒரு மன்னர் அல்லது ஆட்சியாளருக்கான மரியாதைக்குரிய பட்டமாக இருக்கலாம் என்றும் கல்வெட்டு ஆசிரியர் எச். கெர்ன் நம்பினார்.[20]
மாதரத்தின் சஞ்சயன்
16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ஜாவாவில் இயற்றப்பட்ட செரித்தா பாராயாங்கான் (Carita Parahyangan) எனும் சுண்டானிய கையெழுத்துப் பிரதியில் "சாங் ஸ்ரீ விஜயா" என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கையெழுத்துப் பிரதியில், மாதரத்தின் சஞ்சயன் (Sanjaya of Mataram) என்பவர் ஜாவாவில் மன்னர் ஆட்சி உரிமையைப் பெற்ற பிறகு, மன்னர் சாங் ஸ்ரீ விஜயா (Sang Sri Wijaya) என்பவருக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.[21]
பின்னர், உள்ளூர் கல்வெட்டுகள், கையெழுத்துப் பிரதிகள்; மற்றும் சீன வரலாற்றுப் பதிவுகளை ஆய்வு செய்த பிறகு, "ஸ்ரீவிஜயா" சொல் ஓர் அரசியல் அல்லது ஓர் இராச்சியத்தைக் குறிக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
Remove ads
வரலாறு
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads