1572
1572 ஆம் ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1572 (MDLXXII) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 16 – இங்கிலாந்தில் கத்தோலிக்கத்தை மீண்டும் கொண்டுவர சதி செய்ததாக நோர்போக் இளவரசர் தோமசு ஹவார்டு மீது வழக்குத் தொடரப்பட்டது. சூன் 2 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்.[1]
- மே 13 – 13-ஆம் கிரெகோரி 226வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- சூலை 19 – வான்லி தனது 9வது அகவையில் சீனாவின் பேரரசனாக முடி சூடினார். இவர் 45 ஆண்டுகள் சீனாவல் ஆட்சி செய்தார்.
- ஆகத்து 24 – பாரிசு நகரக் கத்தோலிக்கர்கள் ஒன்பதாம் சார்ல்சு மன்னரின் ஆணைக்கிழங்க ஆயிரக்கணக்கான புரட்டத்தாந்தினரைப் படுகொலை செய்தனர். நான்காம் சமயப் போர் பிரான்சில் ஆரம்பமானது.
- நவம்பர் 9 – மீயொளிர் விண்மீன் வெடிப்பு (சுப்பர்நோவா) முதற்தடவையாக கசியோப்பியா என்ற விண்மீன் குழாமில் கோர்னேலியசு ஜெம்மா என்பவரால் அவதானிக்கப்பட்டது.[2] இது 1574 வரை அவதானிக்கப்பட்டது.
- இன்கா பேரரசின் கடைசி நாடு வில்கபம்பா எசுப்பானியாவால் கைப்பற்றப்பட்டது.
- கற்பனை எண்கள் ரஃபாயெல் பொம்பெலி என்பவரால் வரையறுக்கப்பட்டது.
Remove ads
பிறப்புகள்
- ஜோஹன் பாயர், செருமானிய வானியலாளர் (இ. 1625)
இறப்புகள்
- மே 1 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504)
- ஆகத்து 20 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் (பி. 1510)
- செப்டம்பர் 24 – டூப்பாக் அமாரு, இன்காக்களின் கடைசி மன்னர்
- இரண்டாம் திம்மராச உடையார், மைசூர் மன்னர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads