பெப்ரவரி 29

நாள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெப்ரவரி 29 (February 29) அல்லது லீப் நாள் (leap day) என்பது கிரிகோரியன் ஆண்டில் நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன. இந்த நாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 4 ஆல் வகுபடும் 2016, 2020, 2024 போன்ற ஆண்டுகளில் மட்டுமே வருகிறது. கிரெகொரியின் நாட்காட்டி உட்பட சூரியனைச் சுற்றிவரும் புவியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான சூரிய நாட்காட்டிகளில் லீப் நாள் உள்ளது. சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்ட சூரியசந்திர நாட்காட்டிகளில் லீப் அல்லது இடைச்செருகப்பட்ட மாதம் சேர்க்கப்படுகிறது.[1]

<< பெப்ரவரி >>
ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
232425262728
MMXXV

லீப் நாளைக் கொண்டிருக்கும் ஆண்டு நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது. கிரெகொரியின் நாட்காட்டியில், 100 ஆல் வகுபடும் ஆண்டுகள் லீப் நாளைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் 400 ஆல் வகுபடும் ஆண்டுகளில் லீப் நாள் வருகிறது. 1700, 1800, 1900, 2100 போன்றவை நெட்டாண்டுகள் அல்ல, அவை சாதாரண ஆண்டுகள் ஆகும். ஆனால், 1600, 2000, 2400 ஆகியன நெட்டாண்டுகள் ஆகும். சீன நாட்காட்டியில் பெப்ரவரி 29 ஆம் நாள் குரங்கு, டிராகன், எலி ஆகிய ஆண்டுகளில் மட்டுமே வருகிறது.

பூமி சூரியனை முழுமையாகச் சுற்றிவருவதற்கு 365 நாட்களும் மேலதிகமாகக் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் அதிகமாக எடுப்பதால் லீப் நாள் சேர்க்கப்படுகிறது. மேலதிகமான இந்த 24 மணித்தியாலங்கள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டு, மேலதிக ஒரு முழுமையான நாள் சூரியனின் தோற்றநிலைக்கு ஏதுவாக நாட்காட்டிகளில் சேர்க்கப்படுகிறது. 16-ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த யூலியன் நாட்காட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த லீப் நாளைச் சேர்த்து வந்தது; ஆனால் இந்த முறையில் அளவுக்கு அதிகமான (கிட்டத்தட்ட 400 ஆன்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்கள் என) நாட்கள் கூட்டப்பட்டு வந்தன. எனினும், சூரிய ஆண்டு உண்மையில் 365 நாட்கள் 6 மணித்தியாலங்களை விட சிறிது குறைவாகும். குறிப்பாக, அல்போன்சிய அட்டவணையின் படி, பூமி சூரியனை முழுமையாகச் சுற்றி வர 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 16 செக்கன்கள் (365.2425 நாட்கள்) எடுக்கிறது. இதனால், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒரு மேலதிக நாளை சேர்ப்பதால் நாட்காட்டியில் 43 நிமிடங்கள் 12 செக்கன்கள் மேலதிகமாக சேர்க்கப்படுகின்றன. இது 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்களாகும். இந்தக் குறைபாட்டை சமப்படுத்த, ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும் மூன்று லீப் நாட்கள் கைவிடப்பட வேண்டும். பொது விதிக்கு விதிவிலக்காக கிரெகொரியின் நாட்காட்டி குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் படி, 100 ஆல் வகுக்கப்படும் ஒரு ஆண்டு நெட்டாண்டாக இராது. ஆனால் அந்த ஆண்டு 400 ஆல் வகுக்கப்பட்டால் அந்த ஆண்டு நெட்டாண்டாக இருக்கும். அதாவது, 1600, 2000, 2400, 2800 ஆகியவை நெட்டாண்டுகளாக இருக்கும். அதே வேளையில் நானூறால் வகுக்கப்படாத ஆனால் நூறால் வகுக்கப்படும் 1700, 1800, 1900, 2100, 2200, 2300 போன்றவை நெட்டாண்டுகளாக இராது.[1][2]

Remove ads

நிகழ்வுகள்

Remove ads

பிறப்புகள்

Remove ads

இறப்புகள்

அரிதான லீப் நாள் மைல்கற்கள்

உலகின் குறிப்பிடத்தக்க நபர்களில் தாஸ்மானியா முதலமைச்சர் ஜேம்ஸ் வில்சன் (1812-1880) என்பவரே பெப்ரவரி 29 இல் பிறந்து அதே நாளில் இறந்தார்.

சிறப்பு நாள்

  • அரிய நோய் நாள் (நெட்டாண்டுகளில்; சாதாரண ஆண்டுகளில் பெப்ரவரி 28 இல்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads