சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு பேருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி (மெயின் கார்டு கேட் பேருந்து நிலையம்) என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்று. மற்றொன்று மத்திய பேருந்து நிலையம்.[3] சத்திரம் பேருந்து நிலையம் புனித சூசையப்பர் கல்லூரிக்கு அருகில் சிந்தாமணியில் அமைந்துள்ளது.
Remove ads
கண்ணோட்டம்
1979 முதல் செயல்பட்டு வரும்[4] இந்த பேருந்து நிலையம் அருகிலுள்ள சின்னையா பிள்ளை சத்திரம் என்பதிலிருந்து இதன் பெயரை பெற்றது. [2] இந்த பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளையும் சிற்றுந்துகளையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு, மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இயக்குகிறது.[5][6][7]
சேவைகள்
- திருச்சியின் வடக்கு மற்றும் மேற்கே செல்லும் உள்ளூர் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் குறிப்பிட்ட கால இடைவேளையில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
- சென்னை, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி, முசிறி, நாமக்கல், சேலம், பாண்டிச்சேரி போன்ற தமிழக பெரும் நகரங்களுக்கு செல்லும் சில பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு செல்கின்றன.
- மேலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குளித்தலை, கரூர், முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், மோகனூர், வேலூர், தாத்தையங்கார்பேட்டை, புளியஞ்சோலை, துறையூர், தம்மம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, சேலம், பெரம்பலூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தொழுதூர், லப்பைகுடிக்காடு, லால்குடி, புள்ளம்பாடி, திருவையாறு, தஞ்சாவூர், கல்லக்குடி, கீழப்பழூர், அரியலூர், செந்துறை, பெண்ணாடம், விருத்தாசலம், ஜெயங்கொண்டம், கங்கைகொண்டசோழபுரம், சிதம்பரம், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, கடலூர், பாண்டிச்சேரி போன்ற திருச்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.
- மேலும் பாலக்காடு, பெங்களூர், திருப்பதி, ஐதராபாத்து போன்ற பக்கத்து மாநிலங்களும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.[4]

Remove ads
இணைப்பு
சத்திரம் பேருந்து நிலையம் தென்மேற்கில் 1.3 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்துடனும், தென்கிழக்கில் 1.4 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி டவுன் ரயில் நிலையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில்
2013 ஆம் ஆண்டு வெளிவந்த சத்திரம் பேருந்து நிலையம் என்ற தமிழ்த்திரைப்படத்தில் இப்பேருந்து நிலையம் காட்சிப்படுத்தப்பட்டது.[8][9]
மேலும் பார்க்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
