ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா

From Wikipedia, the free encyclopedia

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா
Remove ads

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா (Tourism in Jammu and Kashmir) என்பது ஜம்மு-காஷ்மீர் காஷ்மீர் பள்ளத்தாக்கு, செனாப் பள்ளத்தாக்கு, சிந்து பள்ளத்தாக்கு மற்றும் லித்தர் பள்ளத்தாக்கு, பைசரண் பள்ளத்தாக்கு போன்ற பல பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளது.

Thumb
இளவேனிற்காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு

ஸ்ரீநகர், முகலாயத் தோட்டங்கள், குல்மார்க், பகல்காம், பத்னிதோப் மற்றும் ஜம்மு போன்றவை ஜம்மு-காஷ்மீரில் சில முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் வைஷ்ணவி தேவி கோயிலுக்கும் அமர்நாத்தின் பனிக்கட்டி இலிங்கத்தைத் தரிசிக்கவும் வருகை தருகின்றனர். இது மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. [1]

காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான மலை வாழிடங்களில் ஒன்றான குல்மார்க், உலகின் மிக உயர்ந்த பசுமையான குழிப்பந்தாட்ட மைதானமாகவும் உள்ளது . [2] தீவிரவாத அச்சத்தால் கடந்த முப்பது ஆண்டுகளில் சுற்றுலா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. [3] சுற்றுலாவை நம்பியிருக்கும் வணிகம் தொடர்புடைய மக்கள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் பிராந்தியத்தில் முன்னெப்போதுமில்லாத சூழ்நிலை காரணமாக எப்போதும் பெரும் இழப்பை சந்திக்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் அதன் அழகிய அழகு, மலர் தோட்டங்கள், ஆப்பிள் பண்ணைகள் மற்றும் பலவற்றிற்கும் பிரபலமானது. இது அதன் தனித்துவமான கைவினைப்பொருட்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற காஷ்மீரி சால்வைகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

Remove ads

முக்கிய இடங்கள்

குல்மார்க்

சிஎன்என்-ஐபிஎன் என்றஅமெரிக்க செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி குல்மார்க் "இந்தியாவின் குளிர்கால விளையாட்டுகளின் மையப்பகுதி" என்றும் ஆசியாவின் ஏழாவது சிறந்த "வான் இலக்கு" எனவும் மதிப்பிடப்பட்டது. [4][5] ஸ்ரீநகரிலிருந்து சாலை வழியாக தாங்மார்க் வழியாக இந்த நகரத்தை அணுக முடியும்.

குல்மார்க்கிற்குச் காடுகளின் வழியாக செல்லும் கடைசி 12 கிலோமீட்டரில் பைன் மற்றும் பிர் மரங்களின் அடர்த்தியுடன் சாலை மேல்நோக்கிச் செல்கிறது. பனிச்சறுக்கு, துபோகானிங், ஸ்னோபோர்டிங் மற்றும் ஹெலி-ஸ்கீயிங் போன்ற குளிர்கால விளையாட்டுக்கள் கோண்டோலா மேல் தூக்கி (லிப்ட்) மூலம் அடையக்கூடிய அபர்வத் மலையின் சரிவுகளில் நடைபெறுகின்றன. [6] [7][8] [7][9]

குல்மார்க்கில் குல்மார்க் கோண்டோலா கம்பிவட ஊர்திகள் உள்ளது.

ஜம்மு

ஜம்மு நகரத்தில் சுற்றுலா ஒரு மிகப்பெரிய தொழிலாகும். வைஷ்ணவி தேவி கோயிலுக்கும், காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் செல்லும் யாத்ரீகர்களுக்கு இது ஒரு மைய புள்ளியாகும். ஏனெனில் இது வட இந்தியாவின் இரண்டாவது கடைசி இரயில் முனையமாகும். காஷ்மீர், பூஞ்ச், தோடா மற்றும் லடாக் செல்லும் அனைத்து வழித்தடங்களும் ஜம்மு நகரத்திலிருந்து தொடங்குகின்றன. எனவே ஆண்டு முழுவதும், இந்த நகரம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும்வரும் மக்களால் நிரம்பியுள்ளது. ஆர்வமுள்ள இடங்களில் முபாரக் மாண்டி அரண்மனை, புராணி மாண்டி, இராணி பூங்கா, அமர் மகால், பாகு கோட்டை, ரகுநாத் கோயில், இரன்பிசுவர் கோயில், கர்பலா, பீர் மீதா, பழைய நகரம் உட்பட பழைய வரலாற்று அரண்மனைகளும் அடங்கும்.

பகல்கம்

Thumb
பகல்காம் பள்ளத்தாக்கின் காட்சி

பகல்காம் (காஷ்மீரி உச்சரிப்பு: பெகல்காம் :'மேய்ப்பர்களின் கிராமம்') [10] காஷ்மீர் பள்ளத்தாக்கில், அனந்தநாக் மாவட்டத்தின் வடக்கே அமைந்த மலைவாழிடமும் சுற்றுலாத் தலமும் ஆகும்.காஷ்மீர் பள்ளத்தாக்கில், அனந்தநாக் மாவட்டத்தின் வடக்கே அமைந்த மலைவாழிடமும் சுற்றுலாத் தலமும் ஆகும்.[11] அனந்தநாக் நகரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில், லித்தர் பள்ளத்தாக்கில், லித்தர் ஆற்றங்கரையில், இமயமலையில் 7200 அடி உயரத்தில் உள்ளது. இதன் பசுமையான புல்வெளிகளும் அழகிய நீரும் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. [12]

சோன்மார்க்

சோனாமார்க் என்பது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காந்தர்பல் மாவட்டத்தில் அமைந்த மலை வாழிடமாகும். இதனை "தங்கப் புல்வெளி" என்றும் அழைப்பர் ("Meadow of Gold"). இங்கிருந்து இமயமலையின் 5000 மீட்டர் உயரமுடைய கோல்காய், அமர்நாத், மற்றும் மச்சோய் பனி கொடுமுடிகளை காணலாம்.

அழகிய புல்வெளிகளைக் கொண்ட இதன் அழகைக் காணச் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஏப்ரல் மாத இறுதியில், சோனாமார்க் செல்வதற்கான சாலை திறந்து விடப்படுகிறது.

சோனாமார்க்கிலிருந்து 15 கிமீ தொலைவில் பால்தால் எனும் அமர்நாத் கோயிலின் அடிவார முகாம் உள்ளது.[13] [14] அருகிலுள்ள அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை இங்கிருந்து தொடங்குகிறது. இங்கிருந்து சோஜி லா கணவாயைக் கடந்து செல்வதன் மூலம் மலையேறுபவர்கள் "உலகின் கூரை" என்று அழைக்கப்படும் லே நகரத்தை அடையலாம்.

ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத் துறை ஆண்டு முழுவதும் இங்குள்ள ஆற்றுகளில் "ராஃப்டிங்" எனப்படும் போட்டிகளை ஏற்பாடு செய்கிறது. இங்கு சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த அணிகள் பங்கேற்றனர். [15]

ஸ்ரீநகர்

Thumb
ஸ்ரீநகரின் பறந்த பார்வை

ஸ்ரீநகர் "கிழக்கின் வெனிஸ்" என்று அழைக்கப்படும் பல இடங்களில் ஒன்றாகும். இது [16][17][18] இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீரின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஸ்ரீநகர் மாவட்டத்தில், ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள தால் ஏரியும், சிகாரா எனும் படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும், உலர் பழங்களுக்கும் பெயர்பெற்றது. தால் ஏரிக்கரை அருகில் உள்ள சங்கராச்சாரியார் மலை மீது சங்கராச்சாரியார் கோயில் உள்ளது.

ஸ்ரீநகரில் சில முகலாய தோட்டங்கள் உள்ளன. இது இந்திய துணைக் கண்டம் முழுவதும் முகலாய பேரரசர்களால் அமைக்கப்பட்டவற்றின் ஒரு பகுதியாகும். ஸ்ரீநகர் மற்றும் அதன் அருகிலேயே சாஷ்மா ஷாஹி (அரச நீரூற்றுகள்); பரி மகால் (தேவதைகளின் அரண்மனை); நிஷாத் பாக் (வசந்த தோட்டம்); சாலிமார் பாக்; நசீம் பாக் போன்றவை இதில் அடங்கும். இங்கு ஜவகர்லால் நேரு நினைவு தாவரவியல் பூங்கா 1969 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. [19] உலகப் பாரம்பரியக் களம் தனது உலக பாரம்பரிய களங்களில் சேர்க்கப்பட வேண்டிய இந்திய தோட்டங்களின் தற்காலிகப் பட்டியலில் "ஜம்மு-காஷ்மீரின் முகலாய தோட்டங்கள்" சேர்ந்துள்ளன.

Remove ads

வெரிநாக்

வெரிநாக் என்பது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஒரு சுற்றுலா இடமாகும். இது அனந்தநாக்கில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும், சிறீநகரிலிருந்து சுமார் 78 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகர் நோக்கி சாலை வழியாக பயணிக்கும்போது காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் சுற்றுலா தலமாகவும் வெரிநாக் திகழ்கிறது. இது ஜவஹர் சுரங்கப்பாதையைத் தாண்டிய பின் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயிலில் அமைந்துள்ளது, இது காஷ்மீரின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த இடத்தின் முக்கிய சுற்றுலா அம்சம் வெரிநாக் நீரூற்று ஆகும் இதற்காக இந்த இடத்திற்கு வெரிநாக் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெரிநாக் நீரூற்றில் ஒரு எண்கோண கல் படுகையும் அதைச் சுற்றியுள்ள மேலே மூடப்பட்டு நீண்ட வரிசைத் தூண்கள் உடைய நடைபாதையும் கி.பி 1620 இல் முகலாய பேரரசர் ஜஹாங்கீரால் கட்டப்பட்டது. பின்னர், இந்த நீரூற்றுக்கு அடுத்ததாக ஒரு அழகான தோட்டம் அவரது மகன் ஷாஜகானால் அமைக்கப்பட்டது. இந்த நீரூற்று ஒருபோதும் வறண்டு போவதில்லை அல்லது நிரம்பி வழிகிறது. ஜீலம் நதியின் முக்கிய ஆதாரமாக வெரிநாக் நீரூற்று உள்ளது. [20] அதைச் சுற்றியுள்ள வெரிநாக் நீரூற்று மற்றும் முகலாய பாணி நடைபாதை ஆகியவை இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் அதிகாரப்பூர்வமாக தேசிய முக்கியத்துவத்தின் நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. [21]

Thumb
வெரிநாக் நீரூற்றின் காட்சி
Remove ads

போக்குவரத்து

ஜம்மு-காஷ்மீரை சாலை வழியாகவும், விமானம் மூலமும் அடையலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 1ஏவில் காசிகுண்டிற்கு அருகிலுள்ள பனிஹால் சாலை சுரங்கப்பாதை வழியாகவும், சிந்தான் கணவாய் மற்றும் கிஷ்துவார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 1பி வழியாகவும் இது இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அணுகலைக் கொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ஜம்மு விமான நிலையம் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள ஷேக் உல்-ஆலம் சர்வதேச விமான நிலையம் என இரு பயணிகள் விமான நிலையங்கள் உள்ளன. இவை, புது தில்லி, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களிலிருந்து நேரடி விமானச் சேவைகளைப் பெறுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் 119 கிமீ (74 மைல்) நீளமுள்ள நவீன இரயில் பாதை அக்டோபர் 2009 இல் தொடங்கி வைக்கப்பட்டது. இது பள்ளத்தாக்கின் மேற்கு பகுதியில் உள்ள பாரமுல்லாவை ஸ்ரீநகர் மற்றும் காசிகுண்டுடன் இணைக்கிறது. இது சூன் 26, 2013 முதல் புதிய 11.215 கிமீ (6.969 மைல்) நீளமுள்ள பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை அல்லது பனிஹால் இரயில் சுரங்கப்பாதை வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கை பிர் பஞ்சால் மலைகள் வழியாக பனிஹால் வரை இணைக்கிறது. ஜம்மு முதல் பானிஹால் வரையிலான ரயில் பாதை கட்டுமானப் பணிகள் சீராக முன்னேறி வருவதால் பனிஹால் ரயில் நிலையம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads