ஜம்மு இரயில்வே கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜம்மு இரயில்வே கோட்டம் (Jammu railway division), இந்திய இரயில்வேயின் வடக்கு மண்டலத்தில் உள்ள 6 இரயில்வே கோட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைமையிடம் ஜம்மு நகரத்தில் செயல்படுகிறது. ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தின்[2] ஜம்மு காஷ்மீர் பகுதிகளைப் பிரித்து இப்புதிய ஜம்மு இரயில்வே கோட்டம் 6 சனவரி 2025 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி]]யால் திறந்து வைக்கப்பட்டது.[3]ஜம்மு இரயில்வே கோட்டம், ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு மட்டுமின்றி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் லடாக் போன்ற பகுதிகளும் பயடைய உள்ளது.[4]இக்கோட்டத்தின் முதல் மேலாளர் இ. சினீவாசன் ஆவார்.[5]
தற்போது ஜம்மு இரயில்வே கோட்டத்தின் மொத்த இருப்புப்பாதையின் நீளம் 742.1 km (461.1 mi) ஆகும். ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் உள்ள கீழ்கண்ட தொடருந்து நிலையங்கள் ஜம்மு இரயில்வே கோட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
- அவந்திபுரா தொடருந்து நிலையம்
- அனந்தநாக் தொடருந்து நிலையம்
- இராம்நகர் தொடருந்து நிலையம்
- கக்கபோரா தொடருந்து நிலையம்
- கதுவா தொடருந்து நிலையம்
- காசிகுண்ட் தொடருந்து நிலையம்
- சங்கர் தொடருந்து நிலையம்
- சங்கல்தன் தொடருந்து நிலையம்
- சிறிநகர் தொடருந்து நிலையம்
- சோப்பூர் தொடருந்து நிலையம்
- உதம்பூர் தொடருந்து நிலையம்
- பட்காம் தொடருந்து நிலையம்
- பட்டான் தொடருந்து நிலையம்
- பம்போர் தொடருந்து நிலையம்
- பன்ஸ்காம் தொடருந்து நிலையம்
- பனிஹால் தொடருந்து நிலையம்
- பாரமுல்லா தொடருந்து நிலையம்
- ரியாசி தொடருந்து நிலையம்
- ஜம்மு தாவி தொடருந்து நிலையம்
- ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம்
Remove ads
எதிர்காலத் திட்டங்கள்
- பனிஹால்-பாரமுல்லா ஒற்றை இருப்புப்பாதையை இரட்டை இருப்புப் பாதையாக மாற்றுதல் (135 கிலோ மீட்டர்)
- பாரமுல்லா--ஊரி இடையே 50 கிலோ மீட்டர் நீளாத்திற்கு புதிய இருப்புப் பாதை அமைத்தல்.
- சோப்பூர்-குப்வாரா இடையே 34 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய இருப்புப் பாதை அமைத்தல்
- அவந்திபுரா-சோபியான் இடையே 28 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய இருப்புப்பாதை அமைத்தல்
- அனந்தநாக்-பிஜ்பெஹாரா-பகல்கம் இடையே 77.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய இருப்புப் பாதை அமைத்தல்.
- பட்காம்-லே-பானுப்புலி இடையே 493 கிலோ மீட்டருக்கு புதிய இருப்புப் பாதை அமைத்தல்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads