நந்தலாலா (கவிஞர்)

தமிழ்நாட்டுக் கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிங்காரவேலு நெடுஞ்செழியன் எனும் இயற்பெயர் கொண்ட நந்தலாலா (Nandalala, (26 ஆகத்து[1] 1955[2] – 4 மார்ச் 2025) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞரும், பாடலாசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளரும், இதழாளருமாவார்.[3] தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலை​வ​ராக​வும், தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்​றப் பொதுக்​குழு உறுப்​பின​ராக​வும் பணியாற்றினார்.[4]

விரைவான உண்மைகள் நந்தலாலாNandalala, பொதுக்குழு உறுப்பினர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாட்டின் இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த குன்றாண்டார்கோவில் எனும் ஊரில்[5] 26 ஆகத்து 1955 அன்று இந்திய இரயில்வே ஊழியரும் திராவிட இயக்கப் பற்றாளருமான சிங்காரவேலு என்பவருக்கு மகனாக நெடுஞ்செழியன் பிறந்தார்.[6][7]

இளம் அறிவியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள பாரத மிகு மின் நிறுவன (BHEL) ஆலையில் பணியில் சேர்ந்த நந்தலாலா, பின்னர் இந்தியன் வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டதால் பல ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், செல்லுமிடமெல்லாம் இலக்கியப் பணியாற்றுவதற்கான வாய்ப்பாகவே அவர் எடுத்துக் கொண்டார்.[7]

திருச்சிராப்பள்ளியை அடுத்த கருமண்டபத்தில்[8] காணி நிலம் என்ற பெயரிலான இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு ஜெயந்​தி என்ற மனைவியும், பார​தி, நிவே​திதா ஆகிய மகள்​களும் உள்​ளனர்.[9]

Remove ads

செயல்பாடுகள்

சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக நந்தலாலா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதினார். இவர் ஒருங்கிணைப்பாளராக 1990-களில் வழிநடத்திய சோலைக் குயில்கள் என்ற இதழ், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது.[7][10][11]

இளைஞர்கள், குழந்தைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டு அரசு அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் நடத்திய புத்தகக் கண்காட்சிகளில் ஓர் ஊக்கமளிப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார். மதுக்கூர் இராமலிங்கத்துடன் இணைந்து திண்டுக்கல் ஐ. லியோனியின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.[10]

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) தொடக்க காலம் முதல் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய அவர் அதன் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளராக நெடுங்காலம் பணியாற்றினார். வயல், களம், வானம் எனப் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் மைய அச்சாக விளங்கினார்.[7]

"வள்ளலார்" இராமலிங்க அடிகளின் இருநூறாம் ஆண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தியதில் பங்காற்றினார்.[10]

சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்து இவர் வழங்கிய 'ஓலை விசிறி' என்னும் நிகழ்ச்சியை திருச்சி வானொலியும் வானவில் பண்பலையும் தொடர்ந்து ஒலிபரப்பியது.[12]

Remove ads

படைப்புகள்

நூல்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...

திரைப் பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

இறப்பு

2025 சனவரி பிற்பகுதியில், இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் கருநாடகத் தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நந்தலாலா, சிகிச்சை பலனின்றி மார்ச்சு 4 அன்று காலையில் தனது 70-ஆம் அகவையில் காலமானார்.[11][16][17] தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[16] உள்ளிட்டோர் நந்தலாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.[17]

மார்ச்சு 5 அன்று காணி நிலம் இல்லத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்ட அவர் உடலுக்குத் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியலர்கள், நா. முத்துநிலவன், தங்கம் மூர்த்தி உள்ளிட்ட எழுத்தாளர்கள், மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்.[18]

மார்ச்சு 6 அன்று காலை 10 மணியளவில் காணி நிலம் இல்லத்தில் தமுஎகச தலைவர் ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் அருணன், ச. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்பில் இரங்கல்.கூட்டம் நடைபெற்றது. அதன்பின் 11.30 மணிக்கு நந்தலாலாவின் உடல், காவிரி ஆற்றங்கரையிலுள்ள ஓயாமாரி நவீன மின் எரிமேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 12:15 மணிக்கு எரியூட்டப்பட்டது.[19]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads