எம். எசு. பாசுகர்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்துப்பேட்டை சோமையா தேவர் பாசுகர் (M. S. Bhaskar) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவர் 1987-ஆம் ஆண்டு கதாசிரியரும், நடிகருமான விசுவின் திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.[1][2]
Remove ads
வாழ்க்கை குறிப்பு
- இவர் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் தற்போதைய திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சோமையா தேவர்–சத்யபாமா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் இவரது தந்தை சோமையா தேவர் அக்காலகட்டத்திலே பெரும் நிலக்கிழார் (ஜமீன்தார்) ஆவார்.
- இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். முதலாமவர் ஹேமாமாலினி சென்னையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் இரண்டாமவர் தாரா வட இந்தியத் திரையில் மும்பையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் உள்ளனர்.
- இவருக்கு கிரிதரன் என்ற தம்பி ஒருவர் உள்ளார். இவர் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினத்திலும், சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
- மேலும் இவரது தந்தை சோமையா தேவர் அப்போது அரசியல் செல்வாக்கு பெற்று இருந்ததால் அன்றைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களும், அரசியல் தலைவர்களுமான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் நட்பு வட்டாரத்தில் இருந்தார்.
- அதை பார்த்து பழகிய மகன் பாஸ்கர் அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மீது தீராத காதல் கொண்டு அவரை போல் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வர வேண்டும் என்று எண்ணத்தையும் பின்னாளில் 1980 காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான நடிப்பின் தாக்கமும் இவரை தமிழ் திரையுலகிற்கு கொண்டு வந்தது என கூறப்படுகிறது.
- இவர் பின்னாளில் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி ஆகியவற்றால் பரவலாக அறியப்பட்டார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.[3] இவர் 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
- இவர் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார். காமராஜ் படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் சேது படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
Remove ads
திரைப்படங்கள்
- திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads