எம். எசு. பாசுகர்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

எம். எசு. பாசுகர்
Remove ads

முத்துப்பேட்டை சோமையா தேவர் பாசுகர் (M. S. Bhaskar) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவர் 1987-ஆம் ஆண்டு கதாசிரியரும், நடிகருமான விசுவின் திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.[1][2]

விரைவான உண்மைகள் எம். எஸ். பாஸ்கர், பிறப்பு ...
Remove ads

துவக்க கால வாழ்கை

இவர் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் தற்போதைய திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடைச் சேர்ந்த சோமையா தேவர்–சத்யபாமா இணையரின் மகனாவார். இவரது தந்தை சோமையா தேவர் அக்காலகட்டத்திலே பெரும் நிலக்கிழார் (ஜமீன்தார்) ஆவார். பாஸ்கர் நாகப்பட்டினம் அருகே உள்ள காடம்பாடியில் பிறந்து, அங்கேயே வளர்ந்தார். காடம்பாடியில் உள்ள தேசிய பள்ளியில் ஒன்பதாம் வகுப்புவரை படித்தார்.[3]

அக்காலகட்டத்தில் காடம்பாடிக்கு டி. கே. சண்முகம் குழுவினரின் நடகக் குழு நாடகம்போட வந்தது. டி. கே. சண்முகத்திற்கு சோமையா நன்கு பழக்கமானவர். அவர்கள் இராசராச சோழன் நடகத்தை போடும்போது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டிய நடிகை வரவில்லை. அப்போது பாஸ்கரின் அக்காள் ஹேமமாலினியை நடிக்கவைக்க முடிவு செய்தனர். காலையில் கொடுக்கபட்ட வசனங்களை மாலைக்குள் நன்கு மனப்பாடம் செய்து மாலை நடந்த நாடகத்தில் நன்கு நடித்து பாராட்டுகளைப் பெற்றார். இவ்வளவு திறமைகளை வைத்துக் கொண்டு நீங்கள் இங்கு இருப்பதைவிட சென்னைக்கு வருவது நல்லது என்று டி. கே. சண்முகம் சொன்னதன் பேரில் பாஸ்கரின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. கோபாலபுரம் பள்ளியில் தன் எஞ்சிய பள்ளிப்படிப்பை பாஸ்கர் முடித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.யூ.சி, பி.காம் படித்தார்.

இவரின் முத்த அக்காள்கள் ஹேமாமாலினி சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தார். அப்போது அறிமுகமான செந்தாமரை ஹேமாமாலினியின் குரல் இனிமையைக் கேட்டு திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுக்க ஊக்குவித்தார். மேலும் சிட்டுக்குருவி படத்தில் பின்னணிக் குரல்கொடுக்க வாய்ப்பைப் பெற்றுத்தந்தார். பின்னர் சில்க் ஸ்மிதாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்து புகழ்பெற்றார். பாஸ்கரின் இரண்டாவது அக்கா தாரா வட இந்தியத் திரையில் மும்பையில் பின்னணிக் குரல் கொடுப்பவராக உள்ளனர்.

Remove ads

நடிப்பு வாழ்கை

அக்காள் ஹேமாமாலினி பின்னணிக் குரல் கொடுக்கச் செல்லும்போது அவருக்குத் துணையாக பாஸ்கரும் சென்று வருவார். அப்போது ஒருநாள் வழக்கமாக வரும் பின்னணிக் குரல் கலைஞர் வராத காரணத்தால் சிட்டுக்குருவி படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்பை பாஸ்கர் பெற்றார்.

இவரது தந்தை சோமையா தேவர் அப்போது அரசியல் செல்வாக்கு பெற்று இருந்ததால் அன்றைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களும், அரசியல் தலைவர்களுமான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் நட்பு வட்டாரத்தில் இருந்தார். அதை பார்த்து பழகிய மகன் பாஸ்கர் அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மீது தீராத காதல் கொண்டு அவரை போல் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வர வேண்டும் என்று எண்ணத்தையும் பின்னாளில் 1980 காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் மீதான நடிப்பின் தாக்கமும் இவரை தமிழ் திரையுலகிற்கு கொண்டு வந்தது என கூறப்படுகிறது.

இவர் பின்னாளில் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி ஆகியவற்றால் பரவலாக அறியப்பட்டார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.[4] இவர் 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார். காமராஜ் படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் சேது படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

Remove ads

திரைப்படங்கள்

திரைப்படங்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads