சசாராம்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சசாராம் (Sasaram) (Hindi: सासाराम, Urdu: سسرام), இந்திய மாநிலமான பிகார் மாநிலத்தின் ரோத்தாஸ் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். சாசாராம், பஷ்தூன் தில்லி மாமன்னர் சேர் சா சூரி மறைந்த இடமாகும்.

விரைவான உண்மைகள் சசாராம் सासाराम, நாடு ...
Remove ads

அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்

Thumb
அசோகரின் சாசாராம் பிராமி எழுத்து சிறு பாறைக் கல்வெட்டு

பேரரசர் அசோகர் நிறுவிய 13 சிறு பாறைக் கல்வெட்டுகளில் ஒன்று சாசாராமின் கைமூர் மலையின் சிறு குகையில் உள்ளது.[2] [3]

கல்வெட்டுக் குறிப்பின் உள்ளடக்கம்

Thumb
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
'''மஸ்கி'''
'''மஸ்கி'''
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri
Yerragudi
Yerragudi
'''சாசாராம்'''
'''சாசாராம்'''
  1. தேவானம்பிரியன் (அசோகர்) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறேன்:
  2. .................. நான் பல ஆண்டுகளாக (கௌதம புத்தர்) உபாசனாக இருந்துள்ளேன்.
  3. ஆனால் (நான்) மிகவும் வைராக்கியமாக இருக்கவில்லை.
  4. ஒரு வருடம் மற்றும் இன்னும் ஓரளவு (கடந்துவிட்டது) பின்னர் ............
  5. மேலும் ஜம்புத்தீபத்தில் மனிதர்கள், அந்தக் காலத்தில் தெய்வங்களுடன் கலக்காமல் இருந்ததால், (இப்போது) தேவர்களுடன் (என்னால்) கலந்திருக்கிறார்கள்.
  6. [ஏனெனில்] இது வைராக்கியத்தின் பலன்.
  7. ..........உயர்ந்த பதவியில் இருப்பவர்களால் மட்டும் அடைய முடியாது, (ஆனால்) ஒரு தாழ்ந்த (மனிதன்) கூட வைராக்கியமாக இருந்தால் பெரிய சொர்க்கத்தை கூட அடைய முடியும்.
  8. இப்போது, பின்வரும் நோக்கத்திற்காக இந்த அறிவிப்பு (வெளியிடப்பட்டுள்ளது), (என்று) தாழ்ந்தவர்களும் உயர்ந்தவர்களும் வைராக்கியத்துடன் இருக்க வேண்டும். மேலும் (என் இராச்சியத்திற்கு வெளியே) எல்லையில் இருப்பவர்கள் கூட (அதை) அறிந்து கொள்ளலாம். மேலும் (இது) வைராக்கியம் நீண்ட காலமாக இருக்கலாம்.
  9. மேலும் இந்த விஷயம் (என்னால்) முன்னேற்றமடையும். மேலும் (செய்யப்படும்) கணிசமாக முன்னேறும்; அது குறைந்தது ஒன்றரையாக முன்னேறும்.
  10. சுற்றுப் பயணத்தின் போது இந்த பிரகடனம் (என்னால் வெளியிடப்பட்டது)
  11. இருநூற்று ஐம்பத்தாறு இரவுகள் சுற்றுப்பயணத்தில் கழிந்தது.
  12. மேலும் இந்த விஷயத்தை பாறைகளில் பொறிக்கச் செய்யுங்கள்.
  13. மேலும் இங்கு (எனது ஆட்சியில்) கல் தூண்கள் இருக்கும் இடத்தில் (அது) பொறிக்கப்படுவதற்கான காரணமும் இருக்கிறது.

இ. ஹல்ட்சுச் என்பவர் சாசாராம் பாறைக் கல்வெட்டின் புதிய மொழி பெயர்ப்பை வெளியிட்டுள்ளார்.[4]}}

Remove ads

வரலாறு

சசாராமில் பிறந்த ஆப்கானிய பஷ்தூனியரான சேர் சா சூரி, முகலாயர்களிடமிருந்து தில்லியை கைப்பற்றி வட இந்தியாவை ஆண்டவர். சிக்கலற்ற நிலவரி, நில நிர்வாகம், நீர்பாசானம், சாலை அமைத்தல் போன்றவைகளில் இவரது சீர்திருத்தங்களை, பின்னால் ஆட்சிக்கு வந்த முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் கடைப்பிடித்தனர்.

சசாராம் நகரத்தில் செயற்கையாக அமைந்த ஏரியின் நடுவில், இந்தோ ஆப்கானிய கட்டிடக்கலையில் 122 அடி உயரம் கொண்ட ஒரு சிவப்பு கல்லால் ஆன குவி மாடத்தை நிறுவினார். [7]

இராஜ அரிச்சந்திரன், தன் மகன் லோகிதாசன் பெயரில் கி மு 7ஆம் நூற்றாண்டில், சசாராம் நகரத்தில் கட்டிய ரோட்டஸ்காட் கோட்டை உள்ளது.

Remove ads

தட்பவெப்பம்

கோடைக் காலத்தில் பாட்னா, கயை போன்று சசாராம் மிக அதிக வெப்பம் கொண்டது.

போக்குவரத்து

சாலைகள்

சேர் சா சூரி அமைத்த பெரும் தலைநெடுஞ்சாலை சசாராம் வழியாக செல்வதால், வட இந்தியா முழுவதையும் சாலை வழியாக பயணிக்கலாம்.

தொடருந்து

சசாராம் தொடருந்து நிலையம், பாட்னா, கொல்கத்தா, வாரணாசி, மும்பை, கான்பூர், லக்னோ, மற்றும் தில்லி போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.

புகழ் பெற்றவர்கள்

மக்கள் தொகையியல்

2011ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சசாராமின் மக்கள் தொகை 147,408 ஆகவும், அதில் ஆண்கள் 52% ஆகவும்; பெண்கள் 48% ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 80.26%ஆகவும், ஆண்கள் எழுத்தறிவு 85%ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 75%ஆகவும் உள்ளது. மக்கள் தொகையில் 13% ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர்.[10] சாசாராமில் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர், பௌத்தர்கள் மற்றும் சமண சமய மக்கள் கலந்து வாழ்கின்றனர்.

பொருளாதாரம்

கங்கை ஆறு பாய்வதால் சசாராம் வேளாண் விளை பொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. மேலும் சிவப்பு வண்ண மணற்கல் சுரங்கங்களிலிருந்து, கட்டுமானப் பணிகளுக்கு தேவையான கற்கள் தோண்டி எடுக்கப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads