லும்பினி தூண் கல்வெட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லும்பினி தூண் கல்வெட்டு (Lumbini pillar inscription) படேரியா கல்வெட்டு என்றும் அழைக்கப்படும் இது பண்டைய பிராமி எழுத்துமுறைகளில், காணப்படும் ஒரு கல்வெட்டாகும். இது 1896 திசம்பரில் நவீன நேபாளத்தின் லும்பினியில் அசோகரின் தூண்களில் தொல்லியலாளர் அலோயிஸ் அன்டன் ஃபுரர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. [1] இதேபோன்ற சூழலில் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புகழ்பெற்ற கல்வெட்டு நிகாலி சாகர் கல்வெட்டாகும். லும்பினி கல்வெட்டு பொதுவாக அசோகரின் சிறு தூண் கட்டளைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இது கடந்த காலத்தைப் பற்றியும் சாதாரண மூன்றாவது நபரைப் பற்றியும் (அரசப் பரம்பரையினர் அல்ல), இது அசோகரின் கட்டளைகளாக இல்லாமல் பிற்காலத்தில் அப்பகுதிக்கு அவரது வருகையின் நினைவாக செதுக்கப்பட்டுள்ளது.[2]

Remove ads
கல்வெட்டின் கண்டுபிடிப்பு (1896)
1895இல், அலோயிஸ் அன்டன் ஃபூரர் என்ற தொல்லியலாளர் அருகிலுள்ள நிகாலி சாகர் தூணைப் பற்றிய ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டார். [4][1]
சில கணக்குகளின்படி, திசம்பர் 1 ஆம் தேதி ஃபுரர் லும்பினி தூணைக் கண்டுபிடித்தார். பின்னர் அதை தோண்டுவதற்கு உள்ளூர் தளபதி கட்கா சம்சேர் ராணாவின் உதவியைக் கேட்டார். [5][6] மற்ற கணக்குகளின்படி, தளபதி கட்கா சம்சேர் ராணா தூணின் இருப்பிடத்தை அறிந்திருந்தார். மேலும் ஃபுரரை அதற்காகவே அழைத்துச் சென்றார்.[7] ஆரம்பத்தில், தூணின் மேற்புறம் மட்டுமே தெரிந்தது. அதில் ஒரு இடைக்கால கல்வெட்டு இருந்தது. பண்டைய பிராமி எழுத்துமுறை கல்வெட்டைக் கண்டுபிடிப்பதற்காக தூண் மேலும் தோண்டப்பட்டது. [8][1]
தூணில் உள்ள பிராமி கல்வெட்டு, மௌரியப் பேரரசர் அசோகர் கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்த இடத்திற்கு வருகை தந்து கௌதம புத்தரின் பிறப்பிடமாக அடையாளம் காட்டினார் என்பதற்கு சான்றுகளை அளிக்கிறது. கல்வெட்டை பரணவிதானர் என்பவர் மொழிபெயர்த்தார். [9][note 1]
இன்று, தூண் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியத் தளமாகும்.






Remove ads
புகைப்படங்கள்
- அசோகரின் தூண்.
- தூணில் அசோகரின் கல்வெட்டு.
- தேய்க்கப்பட்ட கல்வெட்டின் தோற்றாம்.
- தூணில் காணப்படும் பிராமி எழுத்து வார்த்தைகள்
- அசோகரின் கல்வெட்டு.
- லும்பினி தூண் கி.பி 13-14 ஆம் நூற்றாண்டு மன்னர் ரிபுமல்லாவின் இடைக்கால கல்வெட்டு.
- லும்பினி தூண் இலச்சினை.
- லும்பினி தூணின் காட்சி
- அசோகரின் தூண்களில் பல்வேறு கல்வெட்டுகள்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads