108 வைணவத் திருத்தலங்கள்

நூற்றியெட்டு திவ்ய தேசங்கள் From Wikipedia, the free encyclopedia

108 வைணவத் திருத்தலங்கள்
Remove ads

திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.

Thumb
திருமால்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன.இவற்றைத் தவிர மற்ற 2 தலங்கள் வானுலகிலும் உள்ளன. 108 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.

Remove ads

தொகுப்பு

வைணவத் திருத்தலங்கள் 108 என்று தொகுத்துக் காட்டியவர் அழகிய மணவாள தாசர். இவர் திருமலை நாயக்கர்[1] ஆட்சியில் அலுவலராகப் பணியாற்றியவர். இவர் தம் காலத்தில் சிறப்புற்று விளங்கிய வைணவத் தலங்களை 108 என்று வரையறை செய்துகொண்டு, அவை இருந்த நாடு வாரியாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்னும் நூலாக வெளிவந்துள்ளது.[2]

திவ்ய தேச வகைப்பாடு

திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

  • சோழநாட்டு திருப்பதிகள் - 40
  • நடுநாட்டு திருப்பதிகள் - 2
  • தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22
  • வடநாட்டு திருப்பதிகள் - 11
  • மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
  • பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
  • நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2

108 வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில்

அமையப் பெற்றுள்ளன.

மேலதிகத் தகவல்கள் தொடர் எண், தலக்குறிப்புகள் ...
Remove ads

பெருமாள் பார்வை படும் திசைகள்

108 திவ்ய தேசங்களில் பெருமாள் அட்டவணையில் கண்டுள்ள திசைகளில் அருள்பாலிக்கிறார்.

பார்வை படும் திசை திவ்ய தேசங்கள்
கிழக்கு79
மேற்கு19
வடக்கு3
தெற்கு7
மண்டலம் திவ்ய தேசங்கள்
சோழ நாடு40
நடுநாடு2
தொண்டை நாடு22
வட நாடு11
மலை நாடு13
பாண்டிய நாடு18
வானுலகம்2

படத்தொகுப்பு

காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads