பிரபு (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

பிரபு (நடிகர்)
Remove ads

பிரபு (பிறப்பு: 25 திசம்பர் 1956) தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார். கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.

விரைவான உண்மைகள் பிரபு, பிறப்பு ...
Remove ads

நடிப்பு

பெங்களூருவில் உள்ள பிஷப் காா்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவரது சித்தப்பா வி. சி. சண்முகம் தனது அண்ணன் சிவாஜி கணேசனின் பல திரைப்படங்களின் கால்ஷீட் மற்றும் அவர் சிவாஜியின் நடிப்பு கதாபாத்திர ஆலோசனைகள் தீர்மானித்தல் மற்றும் சிவாஜி நடிக்கும் பட தயாரிப்பு தளங்களில் அவருடன் இணைந்து நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றினார். திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்த முறையில் தனது சித்தப்பாவிடமே கற்றார். பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் அவர் சித்தப்பா சண்முகத்தின் உறுதியான உதவியால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.[2][3][4]

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

பிரபுவின் பெற்றோர் நடிகர் சிவாஜி கணேசன், கமலா ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தாா்.[5][6] இவரது அண்ணன் ராம்குமார், திரைப்படத் தயாரிப்பாளராவார். இவருக்கு சாந்தி என்ற அக்காவும், தேன்மொழி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இவர் புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகனான விக்ரம் பிரபு, 2012வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார்.[7]

Remove ads

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

1982 முதல் 1989 வரை

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, எண் ...

1990களில்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, எண் ...

2000 முதல் 2009 வரை

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, எண் ...

2010 முதல் தற்போது வரை

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, எண், ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads