ரோஜா செல்வமணி
நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரோஜா செல்வமணி (Roja Selvamani, பிறப்பு: 17 நவம்பர் 1972) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் அரசியல்வாதி ஆவார். இவர் 1991 முதல் 2002 வரை தமிழ், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் ஒரு சில கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இவர் மூன்று நந்தி விருதுகளையும் ஒரு தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவதற்காக திரைப்படத் துறையை விட்டு விலகுவதாக ரோஜா அறிவித்தார். இனி எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
ஸ்ரீ லதா ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட ரோஜா 1972 நவம்பர் 17 அன்று ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் நாகராஜா ரெட்டி, இலலிதா ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு குமாரசாமி ரெட்டி, இராமபிரசாத் ரெட்டி ஆகிய இரு சகோதரர்கள் உண்டு.
பின்னர், இந்த குடும்பம் ஐதராபாத்திற்கு இடம் மாறினார். இவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். ரோஜா திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு குச்சிப்புடி கற்று நடனம் ஆடினார்.
Remove ads
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads