இலங்கையில் தேர்தல்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையில் தேர்தல்கள் பல கட்டங்களில் நடத்தப்படுகின்றன. அரசுத்தலைவர் (சனாதிபதி) தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. இவற்றைவிட மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளுக்கான் தேர்தல்களும் நடைபெறுகின்றன. அனைத்துத் தேர்தல்களும் இலங்கைத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன.
அரசுத்தலைவர் அல்லது சனாதிபதி
அரசுத்தலைவர் அல்லது சனாதிபதி ஐந்தாண்டு காலத்திற்கு உடனடி-வாக்கெடுப்பு மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களை வரிசைப்படுத்துகிறார்கள். முதல் சுற்று வாக்கெடுப்பில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை (50% இற்கும் அதிகமான வாக்குகள்) பெறவில்லை என்றால், வெற்றியாளரைத் தீர்மானிக்க முதல் விருப்பத்தேர்வு வேட்பாளர் நீக்கப்பட்ட வாக்குகளிலிருந்து இரண்டாவது, மூன்றாவது விருப்பத்தேர்வுகள் பயன்படுத்தப்படும்.[1] 2024 தேர்தலில் மட்டுமே முதல் முறையாக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் மூலம் அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர், ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் மூலம் பல-தொகுதி தேர்தல் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அங்கு ஒவ்வொரு கட்சிக்கும் மொத்த வாக்குகளின் விகிதத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கீட்டில் இருந்து பல இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தேசியப் பட்டியல் என்று அழைக்கப்படும் ஏனைய 29 பேர் நாடளாவிய ரீதியில் கட்சி பெறும் விகிதாசார வாக்குகளின்படி ஒவ்வொரு கட்சியின் செயலாளராலும் நியமிக்கப்படுகின்றனர்.
Remove ads
உள்ளூராட்சி சபைகள்
இலங்கையில் உள்ளூராட்சி சபைகள்:
ஆகியவற்றிற்கான உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர்.
அண்மைய தேர்தல்கள்
2024 அரசுத்தலைவர் தேர்தல்
2020 நாடாளுமன்றத் தேர்தல்
Remove ads
கடந்தகாலத் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads