1839
நாட்காட்டி ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1839 (MDCCCXXXIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 19 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஏடன் நகரைக் கைப்பற்றியது.
- ஜூன் 17 - ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
- ஜூன் 22 - லூயி டகுவேர் தனது ஒளிப்படக் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
- ஜூலை 23 - பிரித்தானியப் படையினர் ஆப்கானித்தானின் காஸ்னி நகரைக் கைப்பற்றினர்.
- ஆகஸ்ட் 23 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைக் கைப்பற்றியது.
- செப்டம்பர் 9 - அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.
- நவம்பர் 11 - மெட்ராசு கவர்னர் லார்ட் சான் எல்பின்சுடனிடம் (John Elphinstone, 13th Lord Elphinstone) சென்னைப் பல்கலைக்கழகம் அமைக்க 70,000 பேர் சேர்ந்து மனுக்கொடுக்கப்பட்டது.
- நவம்பர் 25 - இந்தியாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் கொரிங்கா நகரம் முற்றாக அழிந்தது. இதில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
Remove ads
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- இரப்பர் பதனிடலை சார்ல்ஸ் குடியர் கண்டுபிடித்தார்.
- ஜி. யு. போப் சமயப்பணி புரிவதற்காக தமிழ்நாடு வந்தார்.
- மிசூரி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, யாழ் நகரில் 62,137, மல்லாகத்தில் 45,305, தென்மராட்சியில் 43,927, வடமராட்சியில் 35,747, தீவுப்பகுதியில் 25,292 என மொத்தம் 212,408 பேர் பதிவாயினர்.
பிறப்புகள்
- ஜனவரி 19 - பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (இ. 1906)
- மார்ச் 13 - ஜாம்செட்ஜி டாட்டா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (இ. 1904)
- தண்டபாணி சுவாமிகள், தமிழ்ப் புலவர் (இ. 1898)
இறப்புகள்
- ரஞ்சித் சிங், 1780-1839) பஞ்சாபிகளின் சீக்கியப் பேரரசின் மன்னர் (பி. 1780)
1839 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads