2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம் 2012ஆம் ஆண்டில் சூலை 27 முதல் ஆகத்து 12 வரை ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டன் மாநகரில் நடந்தேறிய 2012 ஒலிம்பிக்சில் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கைக் கொண்டு தரவரிசைபடுத்தியப் பட்டியலாகும். 26 விளையாட்டுக்களில் நடந்த 302 போட்டிகளில் ஏறத்தாழ 10,500 விளையாட்டாளர்கள் பங்கேற்றனர்.[1]

குறியீடு:
தங்கம் - ஒரு தங்கப் பதக்கமேனும் பெற்ற நாடுகள்.
வெள்ளி - ஒரு வெள்ளிப் பதக்கமேனும் பெற்ற நாடுகள்.
வெண்கலம் - ஒரு வெண்கலப் பதக்கமேனும் பெற்ற நாடுகள்.
நீலம் - எந்தப் பதக்கமும் பெறாத நாடுகள்.
சிவப்பு 2012 கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்கேற்காத நாடுகள்.


பங்கெடுத்த 204 தேசிய ஒலிம்பிக் குழு அணிகளில், 85 நாடுகள் குறைந்தது ஒரு பதக்கமாவது வென்றன; 54 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கமாவது வென்றன. பக்ரைன்,[2] போட்சுவானா,[3] சைப்பிரசு,[4] காபோன்,[5] கிரெனடா,[6] குவாத்தமாலா,[7] மற்றும் மொண்டனேகுரோ[8] தங்கள் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றன;கிரெனடாவிற்கு முதல் பதக்கமே தங்கமாக அமைந்தது.
Remove ads
பதக்கப் பட்டியல்
இந்தப் பட்டியலில் தரப்பட்டுள்ள தரவரிசை பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC)வின் மரபுமுறைகளுக்கு ஒப்பவும் அந்த அமைப்பால் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பிருப்பாக ஒரு நாட்டின் (இங்கு நாடு அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் குழுவைக் குறிக்கிறது) விளையாட்டாளர்கள் வென்ற தங்கப் பதக்கங்களைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வென்ற வெள்ளிப் பதக்கங்களும் பின்னர் வெண்கலப் பதக்கங்களும் கருத்துள் கொள்ளப்படுகின்றன. இரு நாடுகளும் ஒரே எண்ணிக்கையைப் பெற்றவிடத்து அவர்களுக்கு ஒரே தரவரிசை வழங்கப்பட்டு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நாட்டுக் குறியீடுகளின்படி அகரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
குத்துச்சண்டை, யுடோ, டைக்குவாண்டோ, மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் ஒவ்வொரு எடை வகுப்பிலும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும்.
ஆண்களுக்கான 200 மீட்டர் 'ப்ரீஸ்டைல்' நீச்சல் போட்டியில் இரண்டு பேருக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சமநிலையில் இரண்டுபேரின் திறமை வெளிப்பட்டதால் நடுவர்குழு இங்ஙனம் தீர்மானித்தது; வெண்கலப்பதக்கம் வழங்கப்படவில்லை.[9]
- குறிப்பு
போட்டி நடத்தும் நாடு ஐக்கிய இராச்சியம்(பிரித்தானியா)
ஒலிம்பிக்கில் முதன் முதல் தங்கம் பெற்ற நாடு
ஒலிம்பிக்கில் முதன் முதல் பதக்கம் பெற்ற நாடுகள்
- 85 நாடுகள் இது வரை பதக்கம் பெற்றுள்ளன.
Remove ads
பதக்கப் பட்டியலில் மாற்றங்கள்
ஆகத்து 13, 2012 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் அவை பெண்கள் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற பெலருசு நாட்டு விளையாளர் நாட்சியா ஓஸ்டப்சுக்கை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பதக்கத்தைத் திரும்பப் பெற்றது. இதன் விளைவாக நியூசிலாந்து வெள்ளிப் பதக்கத்திற்கு மாறாக தங்கப் பதக்கமும் உருசியா வெண்கலப்பதக்கத்திற்கு மாறாக வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன. நான்காவதாக வந்த சீனாவின் கோங் லிஜியோவிற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.[10]
Remove ads
ஒவ்வொரு நாளின் இறுதியிலும் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நாடுகள்
முதல் நாள் (ஜூலை 28, 2012)
இரண்டாம் நாள் (ஜூலை 29, 2012)
மூன்றாம் நாள் (ஜூலை 30, 2012)
நான்காம் நாள் (ஜூலை 31, 2012)
ஐந்தாம் நாள் (ஆகஸ்ட் 1, 2012)
ஆறாம் நாள் (ஆகஸ்ட் 2, 2012)
ஏழாம் நாள் (ஆகஸ்ட் 3, 2012)
எட்டாம் நாள் (ஆகஸ்ட் 4, 2012)
ஒன்பதாம் நாள் (ஆகஸ்ட் 5, 2012)
பத்தாம் நாள் (ஆகஸ்ட் 6, 2012)
பதினோராம் நாள் (ஆகஸ்ட் 7, 2012)
பன்னிரண்டாம் நாள் (ஆகஸ்ட் 8, 2012)
பதின்மூன்றாம் நாள் (ஆகஸ்ட் 9, 2012)
பதினான்காம் நாள் (ஆகஸ்ட் 10, 2012)
பதினைந்தாம் நாள் (ஆகஸ்ட் 11, 2012)
பதினாறாம் நாள் (ஆகஸ்ட் 12, 2012)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
