இரண்டாம் நந்திவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் நந்திவர்மன் கி.பி 732 - 769களில் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன் ஆவார்.
Remove ads
பதவியேற்றல்
கி.பி 731 பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மன் சந்ததியில்லாமல் இறந்துவிட, எதிரிகளின் கைகளின் பல்லவதேசம் சிக்காமல் இருக்க தண்டநாயகர்களும், அறிஞர்களும் கம்புஜதேசம் (தற்போதைய கம்போடியா மற்றும் வியட்நாம்) சென்றனர். அங்கே சென்லா அரசராக ஆட்சி செய்து வந்த சிம்மவிஷ்ணுவின் தம்பியாகிய பீமவர்மன் வழிவந்த கடவேச ஹரி வர்மாவின் நான்கு இளவரசர்களில் பல்லவதேசம் வந்து ஆட்சிசெய்ய சம்மதம் தெரிவித்த பல்லவ மன்னன் நந்திவர்மனை அழைத்து வந்து பதவியேற்கச் செய்தனர்.
பட்டத்திற்கு வரும் பொழுது நந்திவர்மனுக்கு பன்னிரண்டு வயது தான். இதைப் பற்றிக் குறிப்பிடும் பண்டைய இலக்கியங்கள் சிறுவயதில் பட்டத்திற்கு வந்த மன்னன் என்று இரண்டாம் நந்திவர்மனைப் பற்றி தெரிவிக்கின்றன.
Remove ads
ஆட்சியும் போர்களும்
பரமேஸ்வரவர்மன் மற்றும் ராஜசிம்மனால் பலமாக்கப்பட்டிருந்த பல்லவ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். அந்தக் காலத்தில் தென்னிந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள் பல்லவ வம்சத்தை சந்ததியில்லாமல் ஒழிக்க எண்ணி பல்லவநாட்டின் மீது படையெடுத்தார்கள். அப்பொழுது இரண்டாம் நந்திவர்மனுக்கு வயது 12. இந்தப் போரில் முதல் முறையாக சிம்மவிஷ்ணு வழிவந்த பல்லவர்கள் தோற்கடிக்கப்பட்டாலும், பல்லவர் படைகளின் பலத்தால் ஆட்சிப் பகுதியில் எந்தவிதமான இழப்பும் இல்லாமல் பல்லவநாடு மீண்டது.
இந்தக் காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகள், பெரும்பாலும் இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சி அமைதியாக இருந்ததாகவே தெரிவிக்கின்றன. இம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் எதிரிகளான பாண்டியர்கள் இம்மன்னரிடம் தோல்வியுற்றனர். தற்போதைய நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயம் இம்மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. இதன் மூலம் தென்னிந்தியாவில் இம்மன்னனின் ஆட்சி பலமாக நிறுவப்பட்டிருந்தது உறுதியாகிறது.
இம்மன்னர் கி.பி 769 ஆண்டு மறைந்தார். திருமங்கை ஆழ்வார் இவரது காலத்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது[1].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads