இந்திய வான்படைத் தளங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய வான்படை ஏழு படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் படைத் தளவாய் (Marshal) தரம் கொண்ட படை அதிகாரி தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்.
வான்படைப்பிரிவுகள்:
- மேற்கு வான்படைப் பிரிவு - தில்லி
- கிழக்கு வான்படைப் பிரிவு - சில்லாங்
- மத்திய வான்படைப் பிரிவு - அலகாபாத்
- தெற்கு வான்படைப் பிரிவு - திருவனந்தபுரம்
- தென்மேற்கு வான்படைப் பிரிவு - காந்திநகர் (முன்னர் ஜோத்பூரில்)
- பயிற்சிப் பிரிவு - பெங்களூர்
- பராமரிப்புப் பிரிவு - நாக்பூர்.
இந்திய வான்படைக்கு 60 க்கும் மேற்பட்ட வான்படைத் தளங்கள் உள்ளன. இந்தியக் கடற்படை தங்களது வான்போக்குவரத்துக்கென்று தனிப்பட்ட வான்படைத்தளங்கள் கொண்டுள்ளன. பன்னாட்டு வான்படைப் பிரிவு தஜிகிஸ்தானில் உள்ள ஃபர்கார் வான்தளத்தைப் பயன்படுத்துகிறது.[1]
ஏழு படைப்பிரிவுகளுள் மேற்கு வான்படைப் பிரிவே மிகப்பெரிய பிரிவாகும். சம்மு காசுமீர், பஞ்சாப் பகுதி, அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள 16 வான்படைத்தளங்கள் இப்பிரிவின் கண்காணிப்பின்கீழ் இயங்குகின்றன. கிழக்கு மற்றும் தென்கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள 15 வான்படைத்தளங்கள் கிழக்கு வான்படைப் பிரிவின் கண்காணிப்பில் இயங்குகின்றன. உத்தரப் பிரதேசத்திலுள்ள ஏழு வான்படைத் தளங்கள், மத்தியப் பிரதேசம் மற்றும் அதைச் சுற்றி மத்திய இந்திய மாநில வான்படைத்தளங்கள் மத்திய வான்படைப் பிரிவால் கண்காணிக்கப்படுகின்றன. தெற்கு வான்படைப் பிரிவின்கீழ் தென்னிந்தியாவிலுள்ள ஒன்பது வான்படைத்தளங்களும், அந்தமான் நிக்கோபார் தீவின் இரு தளங்களும் உள்ளன. மேலும் இப்படைப் பிரிவு கடல்வழிப் பாதுகாப்புப் பொறுப்பையும் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஒட்டிய இந்திய எல்லை முன்னணிப் பகுதியைக் காக்கும் பொறுப்பு தென்மேற்கு வான்படைப் பிரிவினதாக உள்ளது. இப்பிரிவு குசராத்து, மகாராட்டிரம், இராசத்தான் மாநிலங்களில் அமைந்த 12 வான்படைத்தளங்களும் இப்பிரிவின் மேற்பார்வையில் செயற்படுகின்றன.
Remove ads
பட்டியல்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்திய வான்படைத்தளங்களின் பட்டியல் (List of Indian Air Force stations) [2]
மேற்கு வான்படைப்பிரிவு
கிழக்கு வான்படைப்பிரிவு
மத்திய வான்படைப்பிரிவு
தெற்கு வான்படைப்பிரிவு
தென்மேற்கு வான்படைப்பிரிவு
பயிற்சிப் பிரிவு
பராமரிப்புப் பிரிவு
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads