உகாய்க்குடி கிழார்
சங்க கால நல்லிசைப்புலவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உகாய்க்குடி கிழார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். உகாய்க்குடி எனும் ஊரினர் என்று இவர் பெயரின் மூலம் அறியமுடிகிறது. இவர் பாடியப் பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் 63ஆவதாக உள்ளது.[1]
Remove ads
உகாய் என்பது ஒரு செடி. இக்காலத்தில் அதனை அம்மாம் பச்சரிசிச் செடி என்பர். அச்செடி மிகுதியாக இருந்த ஊர் உகாய்க்குடி.
இது பாலைத்திணைப் பாடல். பொருள் தேடிவரச் செல்ல நினைத்த ஒருவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான். அதாவது அவனது மற்றொரு நெஞ்சு அவனது காதலியை நினைக்கிறது.
ஒரு நெஞ்சு சொல்கிறது; பொருள் இல்லாதவர்களுக்கு ஈதலும், துய்த்தலும் இல்லை. எனவே பொருள் செய்.
மற்றொரு நெஞ்சு சொல்கிறது; செய்யும் பொருளால் அம்மா அரிவையை வாங்கமுடியுமா?
எந்த நினைவு என்னை உய்விக்கும்?
அம்மா அரிவை = அழகிய மாமைநிறம் கொண்ட அரிவை
மாமைநிறம் = மாந்தளிர் நிறம்.
Remove ads
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே!
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads