கைந்நிலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இஃது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் வெண்பா பாவகையில் உள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு புலவர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உரை இந்நூலுக்கு உள்ளது. கை என்றால் ஒழுக்கம். நிலை என்றால் தன்மை.[1] ஆகவே,ஐந்திணையின் ஒழுக்க நிலையைக் கூறும் நூல் என்னும் பொருளில் இந்நூலின் பெயர் கைந்நிலை என அமைந்துள்ளது.இந்நூலில் ஆசை,பாசம்,கேசம், இரசம்,இடபம்,உத்தரம் போன்ற வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன.[2] [3]

மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...

கைந்நிலை நூலில் 60 பாடல்கள் உள்ளன. [4]
குறிஞ்சி 12
பாலை 7
முல்லை 3
மருதம் 11
நெய்தல் 12
ஆகிய 45 பாடல்கள் முழுமையான வடிவில் உள்ளன. பிற செல் அரித்த நிலையில் சிதைந்துள்ளன. [5] [6]

Remove ads

மேற்கோள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads